உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலகத் தாளின் தேவை ஆண்டுக்கு 6. 25 விழுக்காடு பெருகுகிறது தயாரிப்போ 1.5 விழுக்காடுதான் உயர்கிறது

இதழ் தாள் தயாரிப்பு ஏற்றுமதியில் கனடாவுக்கு முதலிடம்; பயன்படுத்துவதில் அமெரிக்கா முதலிடம் பெறுகிறது.

தமிழ் நாட்டில் அச்சுக்கலை தோன்றியபொழுது அச்சிடும் காகிதம் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்தார்கள்.

தரங்கம்பாடியில் தங்கித் தமிழ் கற்றுக் கொண்ட சீகன் பால்கு 1708இல் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1713இல் அச்சிடவும் தொடங்கினார்.

தாள் ஆலைகள்

இப்பொழுது தமிழ்நாட்டில் 'சன் தாள் ஆலை' 'சேசாயி தாள் ஆலை "தமிழக அரசு ஆலை' என்று பல ஆலைகள் இருக்கின்றன. உலகில் உள்ள மிகப்பெரிய பத்து தாள் ஆலைகளில் சேசாயி ஆலையும் ஒன்று.

இந்தியாவில் 1983இல் 20 இலட்சம் டன் தாள் உற்பத்தி ஆயிற்று. இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் 42 இலட்சம் டன் தாள் தேவைப்படும் என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் தாள்

இப்பொழுது 'பிளாஸ்டிக்' தாள் கூடத் தயாராகிறது. மழை, வெயில் பனியில் நனைந்து கிழிந்துவிடாமல் இருக்க அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளில் பிளாஸ்டிக் தாளில் இதழ்கள் அச்சிடுகிறார்கள். இவற்றின் மீது அச்சிடவும் செய்கிறார்கள்.

அறிவு வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தாள் முக்கியம். அதனால்தான் 'காகிதம் செய்வோம்' என்று பாரதியார் பாடினார் போலும்

பயன்

அமெரிக்கர்கள் ஆண்டுதோறும் தலா 46 6 கிலோ இந்தியர்கள பயன்படுத்துவது வெறும் 0. 4 கிலோ.

தாள்

ஆண்டுதோறும்

1982 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின் படி அமெரிக்கர்கள் தலா ஆயிரம் பக்கம் படிக்கிறார்கள். இந்தியர்கள் படிப்பதோ 32 பக்கந்தான்.

இதழ் தாள்

முன்னாளில் கையால்தான் தாள் செய்யப்பட்டது. 1809இல் டிக்கின்சன் என்ற அமெரிக்கர் தாள் செய்யும் பொறியை வடித்தார்.

முதலில் தாள் செய்யக் கந்தல் துணி மட்டுமே பயன்பட்டது. 1809இல் திலக்மேன் என்ற அமெரிக்கர் மரக்கூழில் இருந்து தாள் செய்தார்.

200

இன்றைய வளர்ச்சி நிலையில் பார்க்கும்பொழுது தாள் ஆலைகள் பல காகிதச்சுவடி ஆய்வுகள்