உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முறைப்படி இன்றும் தெளிவுபட எழுதப்படவில்லை. மூன்று பேரரசுகளின் ஆட்சி அமைவுக்குள் மாறி மாறி அகப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறுவதால் இம்மண்ணின் வரலாறு இன்னும் குழப்பம் நிறைந்ததாகவும் தெளிவு பெறாததாகவும் இருந்து வருகிறது. எனவே நாட்டார் வழக்காற்றில் வலுவாகப் பேசப்படும் நாஞ்சில் குறவன் வரலாற்றினைப் பொய்யென்று ஒதுக்கவும் இயலவில்லை

நாட்டார் வழக்காற்றில் வழங்கப்பட்ட கதையின் அடிப்படையிலேயே சிற்சில மாற்றங்களுடன் தாள் சுவடியும் எழுதப்பட்டுள்ளது. தாள் சுவடி கி. பி. 1817இல் எழுதப்பட்டிருக்கிறது. இதன் இறுதியில் "திருவிதாங்கோடு சமஸ்தானத்தை சேரப்பட்டதென்று சொல்லப்படுகிறது" என எழுதப்பட்டுள்ளது. 'சொல்லப்படுகிறது என்பதிலிருந்து நாட்டார் வழக்காற்றுக் கதையின் அடைப்படையிலேயே இச்சுவடி எழுதப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

219