உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

ஏற்படுத்தப் பெற்றன. 1

தஞ்சை மராத்தியர்கள் நியாய சபா. முத்ரிதசபா, தர்ம சபா, நியாயதீச சபா என்ற நால்வகை நீதி மன்றங்களை ஏற்படுத்தி இருந்தனர். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஒவ்வொரு வகைப்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப் பெற்றன. நியாய சபை குற்றவியல் வழக்குகளையும். முத்ரித சபை சொத்துரிமை பற்றிய வழக்குகளையும். தர்ம சபை கோயில் மற்றும் தர்ம ஸ்தாபனங்களின் வழக்குகளையும் விசாரணை செய்தன. நியாயதீச சபை எனப்பட்ட பிரதிஷ்டித சபா மேற்கூறிய மூன்று நீதி மன்றங்களில் விசாரணை செய்யப்பட்ட வழக்குகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றமாக விளங்கியது.

'முத்ரித சபை' சிறிய வழக்குகளை விசாரணை செய்யும் நீதி மன்றமாகச் செயல்பட்டது. இங்கு 100 ரூபாய்க்குக் குறைவான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. நியாய சபையும், முத்ரித சபையும் தங்கள் சபையில் விசாரிக்கப்பட்ட வழக்குகளை மேல் முறையீட்டிற்காகத் தர்ம சபைக்கு அனுப்பி வைத்தன 2

2

'தர்ம சபை' மிகப் பெரிய சபையாகக் கருதப்பட்டது. ஏனெனில் இங்கு 100 சக்கரத்திற்கு மேலான வழக்குகள் விசாரித்துத் தீர்க்கப்பட்டன. மேலும் பிரதிஷ்டித சபையில் எல்லா வகை வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. 1827க்குரிய ஓர் ஆவணத்தின் மூலம் இச்சபையில் இரண்டுக்கு மேற்பட்ட நியாயாதிபதிகள் இருந்தனர் என்பது தெரிய வருகிறது. மேலும் மற்ற நான்கு சபைகளின் சட்ட ஆட்சி {விசாரணை) எல்லைக்குள் (Jurisdiction) வாராதவை பிரதிஷ்டித சபையில் விசாரிக்கப் பெற்றன

மேல் முறையீட்டு மன்றங்கள்

நியாயநிதி மஹால்

இம்மஹால் முக்கியமான மேல் முறையீட்டு மன்றமாகச் செயல்பட்டது. அதில் எல்லா வழக்குகளுக்கும் அரசர் வழங்கும் தீர்ப்பே இறுதியானது. இங்கு கொலை மற்றும் பெரிய அளவிலான திருட்டு சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்காக வந்தன. ஆனால் நால்வகை நீதிமன்றங்கள் ஏற்பட்டதால் நீதி வழங்கும் பொறுப்பு அரசரிடம் இருந்து நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது. இதனால் நியாயநிசி மஹால் என்ற அமைப்பு மறைந்து போயிற்று.

கார்பார் பிரசங்கம்

நியாய சபை. மூத்ரித சபை. தர்ம சபை போன்றவற்றின் மேல் முறையீடுகள் பிரதிஷ்டித சபையிலும். சரிவர விசாரிக்கப்பட்டுத் தீர்க்கப்படாமல் இருக்கும் போது அவ்வழக்குகள் கார்பார் பிரசங்கத்திற்கு அனுப்பித் தீர்க்கப்பட்டன. கார்பார் பிரசங்கத்தில் தர்ம சபையில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இங்கு நீதியை நிலை நாட்டுவதற்காக வழக்கு சம்பந்தப்பட்ட

N. Subramanian, History of Tanil Nadu (A. D. 1565 -1956), p 242. 2. பா சுப்பிரமணியன் 'ப ஆ' தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும்

குறிப்புரையும் பக். 195 - 196

காகிதச்சுவடி ஆய்வுகள்

221