உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆவணங்கள் வரவழைக்கப்பட்டு ஆராயப்பட்டன. பின் 'இசுபால்' என்ற சபைக்கு மேல் முறையீட்டிற்கு அனுப்பி நியாயம் வழங்கப்பட்டது. கார்பார் பிரசங்க சபாவில் ஹுஜுர்நவிஸ் என்ற அரசரின் தலைமைச் செயலர் நீதிபதியாக இருந்தார்.

சபா மஜ்கூர்

இது நான்கு சபைகளின் தீர்ப்பையும் எதிர்த்து மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகும். நியாய சபை, நியாயதீச சபை, தர்ம சபைகளில் தீர்ப்புகள் வழங்கியதை எதிர்த்துச் சபா மஜ்கூரில் முறையீடு செய்து நியாயம் பெற்றதாகப் பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.

அரசர்கள்

சபைகளில் வழக்குகள் விசாரணை செய்யப்பட்டுத் தீர்ப்புகள் கூறப்பட்டாலும் அவை நேர்மையான வகையில் இருக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வழக்கைப் பற்றிய விவரங்களை அரசருக்குத் தெரிவித்து நியாயமான தீர்ப்பை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அரசர் வழங்கும் தீர்ப்பே இறுதியானதாக இருந்தது அரசரது தீர்ப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இதனால் அரசர் எந்தச் சபையில் கூறப்பட்ட தீர்ப்பையும் மாற்றி அமைக்கும் உரிமை உடையவராக இருந்தார் என்பதை அறியமுடிகிறது

அதிகாரிகள்

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இருந்த நீதிபதி அத்யஷ எனப்பட்டம் பெற்றிருந்தார். தபனகர்த்தா என்பவர் ஒவ்வொரு மன்றத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார் திம்மதி என்ற அதிகாரியின் கையொப்பம் தாங்கியே தீர்ப்புகள் கூறப்பட்டன மன்றங்களிலிருந்து வெளிவரும் ஆவணங்களும் தீர்ப்புகளும் பட்னாவிஸ் என்ற அதிகாரியின் முத்திரையைப் பெற்றிருந்தன.3 நியாய சபாவில் 17 பேர் நியாயதீச சபையில் 17 பேர். தர்ம சபையில் 15 பேர். முத்ரித சபையில் 34 பேர் என்ற அளவில் அதிகாரிகள் பணிபுரிந்தனர். முத்ரித சபாவில் அதிகமான சிவில் கிரிமினல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

வழக்குகளும் விசாரணைகளும்

வேத சாஸ்திரம், தர்மம், நியாயங்களில் சிறந்தவர்கள் அடங்கிய சிறிய கூட்டத்தினர் பண்டிதர்களாகவும், நீதிபதிகளாகவும் விளங்கினர். இவர்கள் இந்து தர்ம சாஸ்திர முறைப்படிச் சாஸ்திரங்கள். வடமொழி கிரந்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தீர்ப்புகளைக் கூறினர். சரஸ்வதி மகாலிலுள்ள தர்ம சாஸ்திரிகள் இந்நூல்களைப் பார்த்துக் கூறிய கருத்துக்களைக் கொண்டும். தர்ம சாஸ்திரிகளிடமிருந்து அந்நூல்களைப் பெற்றும் அதன்படித் தீர்ப்புகள் முடிவு செய்யப்பட்டன. விஞ்ஞானேசுவரி போன்ற கிரந்தங்களைக் கொண்டு தண்டனை அளிக்கப்பட்டது

3 ஆர் ஜெயராமன் தஞ்சை மராட்டிய மன்னர் காவத்தில் மக்கள் வாழ்ககை நிலை தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக் கருத்தரங்கு 1983,

222

காகிதச்சுவடி ஆய்வுகள்