உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் கொச்சி மிடையேயுள்ள ஒப்பந்தம்

போன்றவற்றைக் கூறலாம்.

18

மன்னருக்கு

இவ் விண்ணப்பங்கள், ஆணைகள். ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வழங்கியவர்களின் பெயர், ஆண்டு, நாள் போன்ற விவரங்கள் மட்டுமே விளக்க அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இவற்றின் உள்ளடக்கம்பற்றிப் பெரும்பாலும் குறிப்பிடவில்லை என்றே கூறலாம் ஒப்பந்தங்கள் குறித்துத் தனியாக மிகப்பெரிய அளவில் ஆய்வு செய்யத்தக்க முதன்மை ஆதாரங்கள் இவற்றில் உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் அன்றைய சமூகப் பொருளாதார அரசியல் நிலையை அறுதியிட்டுக் கூறலாம்

தஞ்சாவூர் தொடர்புடையவை

1786.1788ஆம் ஆண்டுகளில் டச்சு அரசாங்கம் தஞ்சாவூர் ராஜாவுக்குக் கடன் கொடுத்த விவரம்:19 இந்திய நாட்டு அதிகாரங்கள் மற்றும் முகம்மது அலி, சலாபாத் ஜாங், மைசூர், தஞ்சாவூர். தொண்டைமான் பாளையக்காரர்கள் தொடர்புடைய செய்திகள் 20 ஆர்காட்டு நவாபின் கூடுதலான தேவைகள் மற்றும் கர்னாடக அலுவல்கள் 21 சென்னையிலிருந்து வந்த அறிவுரைகள், ஹைதர்அலி, மராட்டியர் தொடர்பான செய்திகள், 1770இல் வந்தடைந்த பிரஞ்சுக் கப்பல்கள், ஹைதர் அலிக்கும் பிரஞ்சுக்காரர்களுக்குமிடையே உள்ள அலுவல் தொடர்புகள். தஞ்சாவூர் ராஜாவுக்கும் ஹைதர் அலிக்கும் இடையே நிகழ்ந்த சதித் திட்டம், மற்றும் ஹைதர் அலிக்கு எதிராக மராட்டியர்களுக்கு நவாப் உதவி செய்தல்22 இதுபோன்று தஞ்சையோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான வரலாற்றுச் செய்திகள் இவ் ஆவணங்களில் புதைந்தும் பொதிந்தும் காணப்படுகின்றன.

மன்னர்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைசூர். பெனாரஸ். சிவகங்கை. தஞ்சாவூர் போன்ற பல மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சான்றாக, ஆங்கிலேயர்களுக்கு எவ்விதச் சலுகையும் வழங்கக்கூடாது என்று அமர்சிங் நேபாள மன்னருக்கு எழுதிய கடிதம் காணப்படுகிறது.23 இக்கடிதம் தடை செய்யப்பட்ட' கடிதங்கள் என்னும் தலைப்பின்கீழ்த் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மன்னர் சரபோஜி மற்றும் அமர்சிங் பற்றிய குறிப்புகள் உள்ளன. 24 சர் ஆர்ச்சிபால்டு காம்பெல் (Sir Archibald Cambell) 12 பண்டிதர்களின் அறிவுரையின் பேரில் கிறிஸ்தவப் பாதிரியார் பேட்ரிக் சுவார்ட்சை (Rev. Friderich Schwartz) மொழிபெயர்ப்பாளராக மன்னர் சரபோஜி மற்றும் அமர்சிங் ஆகியோர்க்கு நியமித்தார்.

18

Vol 638.9

19.

20

Vol 94 (9) pp 40-42, 64-7, 75-77.

21.

22

Vol 105 (7) pp 69-7, 72-91,92

Vol. 57 (7) pp. 95-104. Vol 104 (1,2) pp. 1-30.

23

Vol 650 · 6.

24

Vol. 571 - 4

234

காகிதச்சுவடி ஆய்வுகள்