உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

கிழக்கிந்தியக் கம்பெனிகளின் நிர்வாகச் செயன்முறைகள், வங்காளப் புரட்சியின் விளைவாக நிகழ்ந்த இருட்டறைத் துயர நிகழ்ச்சி, சமுதாயக் கொடுமைகளுள் ஒன்றாகச் சித்திரிக்கப்படும் சதி பற்றிய வரலாற்று உண்மைகள். ஆங்கிலேய ஆட்சியின்போது மாநில ஆளுநர்களிடமிருந்து பெற்ற மூல ஆவணங்கள். நிர்வாகச் செயன்முறைக்காக வெளியிட்ட ஆணைகள். மன்னர்களுக்கிடையே நிகழ்ந்த உடன்படிக்கைகள் போன்ற பல்வேறு வகையான ஆவணங்கள் உள்ளன தஞ்சையோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான வரலாற்றுச் செய்திகளும் காணப்படுகின்றன. இந்திய வரலாற்று நிகழ்வுகளின் குறிப்பேடுகளாக விளங்கும் இந்திய அலுவல் ஆவணங்களைப் பதிப்பித்து வெளியிடத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை வெளியிட்டால் தமிழ்கூர் நல்லுலகத்திற்கு மட்டுமல்ல இந்திய வரலாற்றிற்குப் பெரும் பங்களிப்பினை நல்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்திற்குச் சேரும். நுண்படச் சுருள்களாக விலைக்கு வாங்கி ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இவ் ஆவணங்கள் பதிப்பிக்கப்படவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும். ஆயிரக்கணக்கான வரலாற்றாய்வுகளுக்கு உறுதுணையாகும் முதன்மை ஆதாரங்களாக விளங்கும் இவ் ஆவணங்களின் வெளியீடு என்பது வினாக்குறியாகவே விளங்குகிறது.

வ்

236

காகிதச்சுவடி ஆய்வுகள்