உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க.

செ.இராசு

சிறப்புநிலைப் பேராசிரியர்

கல்வெட்டியல்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

ருக்குறள் அரிய கையெழுத்துப்பிரதி

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் காகிதப்பிரதி ஒன்று கிடைத்துள்ளது. பரிமேலழகர் உரையுடன் கூடிய அப்பிரதி தஞ்சாவூர் வேதநாயக சாஸ்திரியார் (07-09-1774 - 24-01-1864) வீட்டில் கிடைத்தது.

24 செ.மீ. நீளமும், 19 செ. மீ. அகலமும் உடைய பழமையான தாளில், அதிக அளவில் நாற்பது வரிகள் எழுதப்பட்டுள்ளது. குறில் நெடில் வேறுபாடு இல்லாமல். மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறாமலும் எழுதப்பட்டுள்ளது. அக்காலக் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும். ஓலை ஆவணங்களிலும் எழுதப்பட்ட எழுத்துக்கள் போலவே கையெழுத்துக் காணப்படுகிறது. கறுப்பு மையினால் எழுதப்பட்டுள்ளது. சொல்லுக்குச் சொல் பெரும்பாலும் இடைவெளியின்றியே எழுதப்பட்டுள்ளது.

பாரதத்தை ஆசிரியர் பெயருடன் வில்லிபாரதம் என்றும், இராமாயணத்தை ஆசிரியர் பெயருடன் கம்பராமாயணம் என்றும் குறிக்கப்படுவதுபோல் நூல் தலைப்பு 'திருவள்ளுவன் குறள்' என்று எழுதப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும்.

முதலில் 'அதிகார அட்டவணை' கொடுக்கப்பட்டுள்ளது. 'இல்லற இயல் என்பது 'இல்லற இயல்பு' என்று எழுதப்பட்டுள்ளது. ஏழாவது அதிகாரம் மக்கட்பேறு. இது 'புதல்வரைப் பெறுதல்' என்று குறிக்கப்பட்டுள்ளது. துறவற இயல் என்பது துறவறம் என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது. ஓரிடத்தில் அத்துச் சாரியை பெறாமல் அறத்துப்பால் என்பது அறப்பால் என எழுதப்பட்டுள்ளது.

முப்பத்தெட்டாவது 'ஊழியல்' என்பது அறத்துப்பாலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளதைப் பொருட்பாலின் பாயிரம் என்று தனியாக ஓரியல்போல் எழுதப்பட்டுள்ளது.

அதிகாரப் பிரிவுகள் கீழ்வருமாறு உள்ளன.

1-4

5 24

-

காகிதச்சுவடி ஆய்வுகள்

பாயிரம்

இல்லறவியல்பு

237