உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெய்வப் புலமைத் திருவள் ளுவர்குறளில் உய்விக்கு நூலெல்லா முள்ளதெனச் - செய்வித்தான் தத்துவமெல் லாமுடம்பிற் றந்துணர்வார் போலுலக மொத்தபரி மேலழக னோர்ந்து.

முன்னுரைத்த தேவர் குறட்பாவி னுக்கு

இன்னதிது வென்றுரைக்க வெய்தினான் - முன்னூற்

பரிமே லழகியகோப் போற்று தமிழ்க்கூடல்

பரிமே லழகியனென் பான்.

விரைத்தா ரலங்கல் திருவள் ளுவர்முன்னம் வெண்குறட்பா நிரைத்தார் மிகுபொருள் நான்கும் விளங்க நெறிப்புலவர் உரைத்தார் பலரும் அதற்குரை தன்னை உலகறியக்

கருத்தான் வகுத்தமைத் தான்கலை தேரொக்கை காவலனே.

பரிமேலழகருக்கு 'ஒக்கைகாவலன்' என்ற பெயர் உண்டு என்றும், அவர் மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இப்பாடல்களால் அறியப்படுகிறது. ஆனால் மு. இராகவையங்கார் பரிமேலழகர் காஞ்சிபுரத்தவர் என்று ஆய்ந்து நிறுவியுள்ளார் (சாசனத் தமிழ்க்கவி சரிதம் காண்க).

மிகச் சிறந்த பரிமேலழகர் உரை எழுதப்பட்ட ஓலைச்சுவடியைப் பார்த்து எழுதப்பட்டது இந்தக் காகிதப் பிரதி என்பது தெளிவாகிறது.

240

காகிதச்சுவடி ஆய்வுகள்