உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆ. ஜான்துரை

.

மணப்பாறை

மிஷனரி அறிக்கைகள்-ஓர் ஆய்வு

முன்னுரை

மேலை நாடுகளில் தோன்றிய மிஷனரி இயக்கங்கள். நற்செய்தி அறிவிக்கும் பொருட்டு, தம் மிஷனரிகளைக் கடல் கடந்து கீழைநாடுகளுக்கு அனுப்பிவைத்தன. நற்செய்தி என்பது மக்களை அடிமைப்படுத்தும் அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுவித்து முழுமனித விடுதலையை மனுக்குலத்துக்குப் பகிர்ந்தளிப்பதேயாம். இவ்வெண்ணத்துடன் இந்தியாவின் தென்பகுதியான தமிழகத்தில் காலடி எடுத்துவைத்த லுத்தரன் மிஷன். இலண்டன் மிஷனரிச் சங்கம், மெதடிஸ்ட் மிஷனரிச் சங்கம் ஆகிய சீர்திருத்தத் திருச்சபைத் திருத்தொண்டு நிறுவனங்கள் கல்வி. மருத்துவம், சமயம் ஆகியவற்றினூடே சமுதாய மேம்பாடடைய வழிவகுத்த கடிதங்கள். அறிக்கைகள். குறிப்பேடுகள். இலண்டன் தாய்க் கழகத்துடன் கொண்ட தொடர்பறிக்கைகள் ஏராளமானவைகள் ஆலய ஆவணக் காப்பகங்களில் பழுதுபட்ட நிலையில் விரவிக் கிடக்கின்றன. அவ்வாறு கிடைக்கப்பட்ட தகவல்கள். அரிய கையெழுத்துச் சுவடிகள் இவண் சுருக்கமாக ஆராயப்படுகின்றன.

தரங்கை மிஷன் அறிக்கைகள்

டென்மார்க் அரசால் அனுப்பப்பட்டவரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவருமான பர்த்தலே மேயு சீகன்பால்க். ஹென்றி புளூச்சாவ் ஆகிய இருவரும் தமிழகக் கிழக்குக் கடற்கரைப் பகுதியான தரங்கம்பாடிக்கு 1706ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 9ஆம் நாள் வந்திறங்கினர். அக்காலத்தில் ஐரோப்பிய வாணிகத் துறையில் பேசப்பட்ட போர்த்துக்கீசு. பொது மக்கள் பேசிய தமிழ் மொழி ஆகியனவற்றைக் கற்றுத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டனர். ஜெர்மானிய வீரர்களுக்குத் தங்கள் மொழியில் இறை வழிபாடு நடத்தினர். ஐரோப்பியர்களுக்குக் குற்றேவல் புரிந்த பணியாளர்களுக்கு நாள்தோறும் கிறிஸ்தவப் போதனை வழங்கினர். அநாதைப் பிள்ளைகளுக்கு இல்லம் தோற்றுவித்தனர். தமிழ். போர்த்துக்கீசியம், ஜெர்மன் மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. பல மொழி வரம் பெற்ற சீகன்பால்க் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்தார். அச்சிடும் பொறியை 1712ஆம் ஆண்டு ஐரோப்பாவிலிருந்து கொணர்ந்து தமிழ் நூல்களை அச்சிட்டார். இந்த அச்சுப் பொறியே இந்தியாவிற்கு வந்த முதல் அச்சுப் பொறியாகும். அச்சுப் பதிப்பிற்கான தாள்களையும் பொறையாரில் தயாரித்தார். இத்தகு செய்திகளடங்கிய குறிப்புகள் அரிய கையெழுத்துச் சுவடிகளாய் ஆலய அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.' பல தமிழ்ப் 1 புது எருசவேம் ஆலயம். TELC, தரங்கம்பாடி. கள ஆய்வு நாள் 18-08-1996.

காகிதச்சுவடி ஆய்வுகள்

243