உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாட நூல்களையும். தமிழ் ஜெர்மன் மொழி அகராதியையும் எழுதித் தொகுத்தார். தென்னிந்தியாவிலுள்ள இந்து சமயத்தை ஆய்வு செய்து ஜெர்மன் மொழியில் எழுதினார்.

அநாதைச் சிறுவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்கட்கு இலவசக் கல்வி கொடுக்கப்பட்டது. கல்வி புகட்டும் ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. நற்செய்திப் பணியாளர்களை உருவாக்கும் பயிற்சிக் கூடமும் தோற்றுவிக்கப்பட்டது. ஏழை மக்கள் பாதுகாப்புடன் தங்கிட வீட்டுமனைகள் கட்டப்பட்டன. இறை வழிபாட்டுக்கு வழிபாட்டு மனைகள் அமைக்கப்பட்டன.? இவ்வாறு லுத்தரன் மிஷனின் பணித்தள அறிக்கைகள் அரிய கையெழுத்துச் சுவடிகளாய் இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இலண்டன் மிஷனரிச் சங்க அறிக்கைகள்

இலண்டன் மிஷனரிச் சங்கம் தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் கல்வி, மருத்துவம். சமயம் ஆகிய துறைகளில் பணியாற்றியது. தென் தமிழ் நாட்டில் திருவாங்கூர்ப் பகுதியென்ற தற்போதைய கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் 1806ஆம் ஆண்டில் ரிங்கல் துபே என்பவரால் மிஷனரிப் பணி தொடங்கப்பட்டது. 1818ஆம் ஆண்டு சார்லஸ் மீட், ஸ்டீபன் நீல் ஆகியோர் நாகர்கோயிலைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு, குறிப்பாக நெய்யூரில் ஆண்கள், பெண்கள் ஆ பள்ளிகளையும். விடுதிகளையும் நிறுவினர். 1874ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனையைத் தோற்றுவித்தனர். 1893ஆம் ஆண்டு நாகர்கோயிலில் கல்லூரி ஒன்றும் தொடங்கப்பட்டது போன்ற அறிக்கை ஏடுகள் இன்றும் அழியாமல் காக்கப்படுகின்றன 3

கொங்கு நாட்டுப் பகுதிகளான ஈரோடு. கோயம்புத்தூர், சேலம் பகுதிகளில் இலண்டன் மிஷனரிச் சங்கம் தொடக்கக் கல்வி முதல் தொழில் நுட்பக் கல்வி வரைக்கும் அடித்தளமமைத்தன. சமுதாயப் பள்ளிகளையும் தோற்றுவித்து விழிப்புணர்வுக் கல்வியளித்தன என்பதற்கு ஈரோடு பிரப் ஆலய ஆவணக் காப்பகத்திலுள்ள அரிய கையெழுத்துச் சுவடிகள் சான்றளிக்கின்றன.

சீர்திருத்தத் திருச்சபைத் திருத்தொண்டர்கள் இந்தியரைக் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கிறிஸ்தவராக்குவது மட்டுமல்லாது கல்வி மூலம் சமுதாய

றத்தைக் கொணர்வதையே தலையாய பணியாகக் கொண்டு செயல்பட்டனர்.

இதனை அடிக்கோடிட்டுக் காட்டும் நிலையில் ஆயர் எபிநேசர் ஈஜென்கின்ஸ் கல்வி. மருத்துவம். நற்செய்திப் பணிக்கு முன்னோடியாகவும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறது என மிஷனரிச் செய்தி அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.4

சமத்துவ சமுதாயம் நிறுவும் அறிக்கைகள்

கிறிஸ்தவத் திருமறை சுட்டும் யூதர் புறவினன் என்ற வேறுபாடு. ஒன்றாக 2.Tablet, On the well behind the alter of the New Jerusalem Church at Tranqubar. 3. London Missionary Society: The one hundred and forty years first Annual Report (West minister, 1936), pp. 40 ff.

4. Missionary Notice, Vol. XXI, Oct. 1876, pp. 335 ff.

244

காகிதச்சுவடி ஆய்வுகள்