உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உண்ணாத பாகுபாடு. கலப்பு மணம் புரியாத செயல்பாடு போன்றவை இந்தியச் சமுதாயத்திலும் இழையோடியிருப்பதையறிந்து அதனைக் களைந்திடக் கல்வியை ஆற்றல்மிகு கருவியாய்ப் பயன்படுத்தினர். தீண்டாமைச் சமுதாயத்தைப் பீடித்த தொழு நோய்: அதனைக் களைந்திடும் மருத்துவமனை கல்விக்கூடமேயெனப் பள்ளிகள் பல திறந்தனர். முழு மனித முன்னேற்றமே மிஷனரிச் சங்கங்களின் குறிக்கோளாய்த் திகழ்ந்தது. சமுதாய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து மக்கள் என்ற தகுதியைக் கல்வி மூலம் பெறச் செய்வதே திருத்தொண்டர்களின் நோக்கமாயிருந்தது என்பதை கார்டியன் இதழ்5 எதிரொலிக்கிறது.

நற்செய்திப்பணிக்குக் கருவியாகக் கல்வி செயல்பட்டதென்ற நிலையன்றிக் கல்வியே மனிதனை முழு மனிதனாக்குவது என்ற ஆழ்ந்த குறிக்கோளுடன் கிரிப்ஸ் ஐயர் 1827ஆம் ஆண்டு சேலத்தில் பள்ளிகளைத் தொடங்கிச் சமுதாய மாற்றத்துக்குத் தடமமைத்தார். 6

திருச்சபை வழங்கும் கல்வியின் நோக்கம் அறிவற்ற கிறிஸ்தவ சமுதாயத்தை அமைப்பதும் அவர்தம் தாய்மொழியிலேயே திருமறையைக் கற்றுக் கொடுப்பதும். கட்டுப்பாட்டுடன் வாழ்வதுமேயாம் என்ற சீரிய நோக்கத்தைச் செயல்படுத்தினர்' என்று வெஸ்லியன் மெதடிஸ்ட் சங்க அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.

சாதி அமைப்புக்கு வெளியே தீண்டத்தகாதோராக்கப்பட்ட 50 மில்லியன் மக்களின் சமுதாய விடுதலைக்குக் கல்வியை ஆற்றல் மிக்க கருவியாகக் கருதி இலண்டன் மிஷனரிச் சங்கம் பள்ளிகளைத் தொடங்கியதென மிஷனரி அறிக்கை குறிப்பிடுகின்றது.8

மிஷன் தொடக்கக் கல்வி அறிக்கை

அறியாமை இருளில் அல்லலுறும் மக்களுக்கு அறிவொளி ஏற்றுவதே. நற்செய்திப் பணி என்ற நோக்கத்துடன் மிஷனரி பள்ளிகள் பலவற்றைத் தொடங்கினர். இத்தகு மிஷன் பள்ளிகளில் படித்து வேலை வாய்ப்புப் பெற்றோர் கிராமங்களில் தம் மக்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதிலும், திருப்பணியாற்றுவதிலும் தம்மை இணைத்துக் கொள்வோரே மிஷன் பள்ளியின் நோக்கத்தை நிறைவேற்றுவோராவர். பொருளாதாரத்தில் சுயச்சார்பு எய்திட வேளாண்மைப் பணியில் ஈடுபடுவதுடன் குடிசைத் தொழில்களையும் கற்கும் மாந்தர் வாழ்வு வளம் பெறும். கற்குமிடம் சமுதாயக் கூடமாகவே மிளிர்ந்திடும் என்று மிஷன் கல்வி அறிக்கை விளம்புகிறது.

திருச்சிராப்பள்ளி குழு இயக்க அறிக்கை (MMS)

தொடக்கப் பள்ளிகள் மிக அதிகமாகத் தோற்றுவிப்பதற்குக் காரணம் தென்னிந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்குக் கட்டாயமாகக் கல்வியளிக்க வேண்டும். பெண் கல்விக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்தில் சிறப்பு நிதியுதவி அளிக்க

5. H. A. Popley, Gaurdian, May 28, 1936, p 345.

6. T. C. Whitney, Hundred Years of Salem Mission History, pp. 816 ff.

7. Wesleyan Methodist Society. p. 18.

8. Mission Report, 1919, p. 6.

காகிதச்சுவடி ஆய்வுகள்

245