உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேண்டும் 1913ஆம் ஆண்டிலிருந்து உயர் கல்விக்கு அதிக நிதியுதலி குறைக்கப்பட்டுத் தொடக்கக் கல்விக்கு அதிக நிதி வழங்கப்பட்டது.' சார்லஸ் உட் கல்வி அறிக்கையின் விளைவாக அரசின் நிதியுதவி மிஷன் பள்ளிகளுக்குக் கிட்டியது இதனால் மிஷனரிச் சங்கங்கள் பல தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கின என்று மிஷனரி அறிக்கைகள்° பறைசாற்றுகின்றன

மிஷனரிகளால் தொடங்கப்பட்ட பள்ளிகள் சாதி வேறுபாடின்றி எல்லா இன மாணவர்கட்கும் பாகுபாடின்றிக் கல்வியைக் கற்றுக் கொடுத்தன எனக் கடிதங்கள் தகவல் தருகின்றன 'முழு மனிதனுக்கும் முழுக்கல்வி வழங்கிடும் மிஷன் பள்ளிகளில் முதல் தலைமுறைக் கிறிஸ்தவர்கள் கல்வி கற்காதவர்களாயிருந்தாலும் தங்கள் பிள்ளைகளாவது கல்வி கற்கட்டும் என்ற ஆர்வத்தினடிப்படையில் எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்குக் கட்டாயம் அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்தனர்; ஏழைக் குழந்தைகள் தங்கிப் பயில இலவச விடுதிகள் அமைத்துத் தந்து உணவு, உடை, மருத்துவம், கல்வி ஆகியனவற்றை அவர்களுக்கு இலவசமாகத் தந்தனர் என ஆண்டறிக்கை 12 சான்று பகர்கின்றது.

முடிவுரை

மிஷனரி அறிக்கைகள் அரிய கையெழுத்துச் சுவடிகளாய் ஆலய அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன அழிவை எதிர்நோக்கியுள்ள இக்கடிதங்களுள், குறிப்பேடுகள், ஆண்டறிக்கைகள் போன்றவை தரும் செய்திகள் வரலாற்று நிகழ்வுகள் பேணிக் காக்கப்பட வேண்டியவை என்பதை அறிவுறுத்துகின்றன. அவை தரும் செய்திகள் குறிப்பாகக் கல்வி, மருத்துவம், சமயம். சமுதாய மேம்பாடு ஆகிய துறைகளில் மிஷனரிகள் ஆற்றிய பணிகள்பற்றியதாகும் வரலாற்றுப் பார்வையுடன் லுத்தரன் மிஷன் அறிக்கைகள். மெதடிஸ்ட் மிஷனரிச் சங்க அறிக்கைகள் ஆகிய சீர்திருத்தத் திருச்சபைகள் ஆற்றிய மனிதவள மேம்பாட்டுப் பணிகள் சிலவற்றை இவண் சுருக்கமாக ஆய்ந்திட முடிந்தது. இவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆவணக் காப்பகத்தில் கணினி வழியே காக்கப்படவேண்டியது மிகவும் தேவையான ஒன்றாகும்.

நூலோதி

1. Annul Reports of the MMS 1820 - 1947 (Various Volumes)

2. Education in the Mass Movement area ofTrichinopoly Dt. Dec. 1941. 3. London Missionary Society : Mission Reports 1848, 1919, 1920, 1927, 1930 (West Minists : LMS), 1934.

4. Tranqubar Mission Reports (Various Volumes).

9

Education in the Mass Movement Area of Trichirappalli District: Report of the Education Sub Committee (Trichy Dodson Press, 1942), pp. 1-3. 10 The Wesleyan Methodist Church: Report of the South India Provincial Synod (RSIPS), (Mysore Wesley Press, 1936), p 21.

11 Mss, 'Madras' Box (1822-1824), Letter of Rev. James Mowat to Rev Richard Watson, Nagapattinam. dt 11th June 1823

12, Annual Reports of the MNIS 1820-1947, Vol. X1V, 1860, pp. 28-31.

246

காகிதச்சுவடி ஆய்வுகள்