உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ப.உஷாராணி

ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

மராத்தியர் காலக் கப்பல் கட்டும் தொழில்

கி.பி. 1676 முதல் கி. பி. 1855 வரை தமிழகத்தின் தஞ்சாவூர்ப் பகுதியை ஆண்ட மராத்தியர்கள் தமது அன்றாட அலுவல்கள். வரவு செலவுக் கணக்குகள். கடிதப் போக்குவரத்து போன்றவற்றை மராத்திய மோடி எழுத்துக்களில் எழுதி வந்துள்ளனர். அத்தகைய மோடி ஆவணங்களைக் கொண்டு தஞ்சாவூர் மராத்தியர்களின் கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சிபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கப்பல் கட்டும் தொழில்

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர்தம் முதுமொழி. முற்காலத்தில் ஒரு நாட்டு மக்கள் தங்கள் நாட்டுப் பொருள்களை மற்றொரு நாட்டிற்குப் பாய்மரக் கப்பல்களில் எடுத்துச் சென்று விற்றுவிட்டுத் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வந்தனர். இவ்வாறு மக்கள் போக்குவரத்திற்கும் வாணிபத்திற்கும் கப்பல்களைப் பெரிதும் பயன்படுத்தியதை இலக்கியங்கள். கல்வெட்டுக்கள். ஆவணங்கள் போன்றவற்றின் மூலம் அறியமுடிகின்றன. தமிழகத்திலேயே பல துறைமுகங்கள் இருந்துள்ளன. அதனால் தமிழகத்தை ஆட்சி செய்த பல்வேறு மன்னர்கள் படகு. தோணி. கப்பல் போன்றவற்றைக் கட்டுவதிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதைப் பல சான்றுகளின் மூலம் அறியமுடிகின்றன அவ்வகையில் மராத்தியர்கள் ஆட்சியிலும் தஞ்சாவூரில் கப்பல் கட்டும் தொழில் காணப்பட்டது.

கி.பி. 1821 மார்ச்சுத் திங்கள் ஐந்தாம் நாள் கல்கத்தாவில் கப்பல் கட்டுகிற இடத்தை இரண்டாம் சரபோஜி மன்னர் பார்வையிட்டார். அங்குக் கப்பலின் நீள அகலத்துக்குத் தகுந்தபடிப் பள்ளம். கப்பலின் உயரத்திற்குத் தக்கபடி ஆழம். சுற்றிலும் இறங்குவதற்குரிய படிகள். கப்பலுக்கு நங்கூரம், அப்பள்ளத்திற்கு மேற்புறம் கங்கையாறு. ஆற்றுநீர் பள்ளத்திற்குள் வராமலிருக்கப் பலவகைக் கதவுகள், ஊற்றுநீர் தேங்கினால் அந்நீரை அப்புறப்படுத்தும் குழாய்கள். கப்பல் வேலை முடிந்ததும் கதவுகளைத் திறந்தால் கங்கையாற்று வெள்ளம் வந்து நிரம்புதல். கப்பலை எளிமையாகக் கங்கையாற்றுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதையெல்லாம் மன்னர் அறிந்தார். இவற்றை 25-07-1821இல் காசியிலிருந்து அவர் எழுதிய காகிதச்சுவடி ஆய்வுகள்

247