உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கடிதத்திலிருந்து அறியமுடிகிறது இவற்றையெல்லாம் அறிந்த சரபோஜி மன்னர் தஞ்சாவூரிலும் இந்த முறைகளைப் பின்பற்றிக் கப்பல் கட்டும் தொழிலை மேன்மைப்படுத்தியிருக்கக்கூடும் என்று எண்ணமுடிகிறது.

கி பி 1826இல் சாலுவநாயக்கன் பட்டினத்தில் அரண்மனையாருக்குக் கப்பல் இருந்ததாகத் தெரிகிறது' தஞ்சாவூரில் பட்டுக்கோட்டையிலிருந்து 70 மைல் தொலைவிலுள்ள சாளுவநாயக்கன் பட்டினம் மிகப் பெரிய துறைமுகமாக விளங்கியது. வெளிநாடுகளுடனான வாணிபத்திற்கு இத்துறைமுகம் பயன்படுத்தப்பட்டதால் கப்பல் கட்டும் தொழிலைச் சரபோஜி இங்கு அமைத்தார். இதனால் இவ்விடம் சரபேந்திரராச பட்டினம் எனப்பட்டது. கப்பலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் இங்குச் செய்யப்பட்டன.?

ச்

சரபோஜி மன்னர் காசிப் பயணம் சென்றபொழுது கப்பல் வேலையில் திறமை மிக்க ஆங்கிலேய நாட்டைச் சார்ந்த மிஸ்தர் யுஷ்டவிக என்பவனை ரூ 180க்கு மாதச் சம்பளத்தில் நியமித்தார். பின்னர் அவனைத் தஞ்சாவூருக்கு அனுப்பி. அவன் உதவிக்குத் தச்சர், கொல்லரை உடன் அனுப்பி, சிறிய மற்றும் பெரிய கப்பல்களைக் கட்டச் செய்ய ஆணை பிறப்பித்தார்.3 இதன் மூலம் மராத்தியர்கள் இத்தொழிலுக்குத் திறமையான ஆட்களை நியமித்துள்ளனர் என்பது தெரிகிறது.

சாளுவநாயக்கன் பட்டினத்திலுள்ள கப்பலின் வேலைக்காகச் சுரப்பின்னை மரங்களை வெட்டிச் சேகரம் செய்து கொண்டு வருவதற்காகப் படகோட்டி மாரியப்பாவை அனுப்பியுள்ளது. இங்குள்ள பெரிய கப்பலுக்குப் பாய்மர நாகூரிலிருந்தும் பரங்கிப்பேட்டையிலிருந்தும் வாங்க ஆட்களை அனுப்பியுள்ளார்.5 இந்தச் செய்தியானது இங்குப் பெரிய அளவிலான கப்பல்கள் கட்டப்பட்டன என்பதை அறியமுடிகிறது. கப்பல் கட்டுவதற்குச் சாமான்கள் திருச்சிராப்பள்ளியிலிருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன. கப்பல் சாமான்கள் கொண்டு வருவதற்குச் சாளுவநாயக்கன் பட்டினத்திற்கு 4 ஒட்டகம் போகிறது' என்ற குறிப்பிலிருந்து கப்பல் கட்டத் தேவையான பொருள்கள் இங்குத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிகிறது.

சரபேந்திரராச பட்டணம் 'மகாதேபிரசாத்போட் சிறு கப்பல் மிகவும் பழுதாகிவிட்டதனால் புதுச் சாமான்கள் வாங்குதல்" என்பதன் மூலம் சிறு கப்பல்களும் இங்குக் கட்டப்பட்டுள்ளன என்பதை அறியமுடிகிறது.

கி. பி 1811இல் சமுத்திரம் என்னும் ஏரியிலுள்ள கப்பல் பழுது பார்க்கக் கருங்காலிப் பலகை 17 இரும்பு எடை 3 கொடுக்கப்பட்டது. இலங்கை போன்ற

9

1 கே எம். வேங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர் கால் அரசியலும் சமுதாயு வாழ்க்கையும். ப 392

2

3.

4.

5

6

வீ. சொக்கலிங்கம். 'மோடிப் பலகணி கப்பல் செய்தி. சரசுவதி மகால் இதழ், தொகுதி 16. ப. 8 கே. எம். வேங்கடராமையா. மு. கா. நூல், ப. 392

பா. சுப்பிரமணியன் (ப. ஆ ), தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும், தொகுதி 1. ப 158

சரசுவதி மகால் மோடி ஆவணத் தமிழாக்கக் குறிப்புகள் தொகுதி 4. ப 16

பா சுப்பிரமணியன் ய ஆ) மு. கா. நூல், தொகுகி 1. பக். 469-470.

ம.மோ.ஆ

ம. மோ. ஆ.

ச. ம. லோ. ஆ.

தொகுதி I.43

தொகுதி 1. ப

ப 10.

தொகுதி 11.ப 26

248

காகிதச்சுவடி ஆய்வுகள்