உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாடுகளிலிருந்தும் கப்பல்கள் பழுது பார்க்க இங்கு வந்தன. 1826இல் மட்டும் 4 கப்பல்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் தயாரித்த கப்பல்களில் முத்திரைகள் இடம்பெற்றன. இந்த முத்திரைகளை நீக்க முயன்றவர்களுக்கு 25 சக்கரம் 2 பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பெற்றது.'

10

சாளுவநாயக்கன் பட்டணம் கப்பல் வேலைக்காரர்கள் 3 பேர் கண்டியூரில் தண்ணீர் வேலை செய்கிறார்கள். 1 காரைக்கால் துறைமுகம் இளைய கப்பலோட்டிகள்

வேண்டும். நல்ல கட்டு மஸ்தான களுடன் 9 பேர்களில் 7 பேரை அனுப்ப

உத்திரவு. அவர்கள் தடல் அப்பாசாமி. சுப்பராவ். சாமாஜி. ஹிரோஜி. கோவிந்தராவ். லிங்கோஜி. சந்திரராவ் என்பவர்கள் ஆவர்.12 இதன் மூலம் கப்பல் வேலை செய்யச் சிறந்த ஆரோக்கியமானவர்களையே நியமித்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

ரூ

சரபேந்திரராசபுரத்தில் சர்க்காருக்குரிய கப்பலில் சில இடங்களில் செப்புத் தகடுகள் போடுவதற்கும். தார் பூசுவதற்கும், கோழி வெட்டிக் கடலில் தள்ளுவதற்கும் 200 செலவாகும். அதிகமாய்ப் பழுது பார்க்க அவசியம் இல்லாததால் கப்பலுக்குரிய செலவுகள் யாவும் செய்து கொண்டு ஆண்டொன்றுக்கு ரூ 600 வாடகை கொடுப்பதாக. 'ஜேம்ஸ்ரோஸ்' என்பவர் 25-01-1838இல் கடிதம் எழுதினார். அதன்படி 16-07-1838இல் சரபேந்திரராச பட்டணம் மத்தியஸ்தர் கனகசபையா பிள்ளைக்கு ஜேம்ஸ்ரோஸ் கப்பல் பத்தா கூலி உடன்படிக்கை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாய்மரக் கப்பலுக்குப் பெயர் 'பிரகதீசுவரப் பிரசாத்' என்பதாகும்.

குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஜேம்ஸ் ரோஸ் சாதாரண மனிதர் அல்லர். மிக்க திறமையுடையவர். நன்கு கணக்கெழுதுவதில் வல்லவர். கப்பலைப் 'பத்தா கூலி' எடுப்பதில் மிக்க அனுபவம் உள்ளவர். 1836இல் மேஸ்டர் பீடன் துரையினுடைய வெங்கிட்டரெட்டி' என்ற கப்பலையும். 1837இல் பாவாநகர் அரசருடைய 'தவுலத் பிரசாத்' என்ற கப்பலையும் பத்தாகூலிக்குப் பிடித்து அனுபவித்தவர். 13 கப்பலைக் குத்தகைக்கு விட்டுப் பழுது பார்க்கும் நிலையும் அக்காலத்தில் நிலவியுள்ளது.

14

சரபேந்திரராச பட்டணம் கப்பல் ஜேர்மங்கசாரி நாகப்பட்டணம் கொண்டுபோய்ச் சாயம் பூச மற்ற வேலைகள் செய்த செலவுகள் என்பதன் மூலம் நாகப்பட்டணத்தில் சாயம் பூசப்பட்டது என்பதை அறியமுடிகிறது. இவ்வாறாக அரசருக்குச் சொந்தமான கப்பல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் பழமையான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் இரண்டாம் சிவாஜி காலத்தில் 1838இல் ஒரு கப்பல் சர்க்காரிலிருந்து வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். மராத்தியர் காலத்தில் அரசாங்கத்தால் இத்தொழிலுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் கப்பலும் காணப்பட்டது என்ற செய்தியும் உள்ளது.

15

கி. பி. 1777இல் அதிராம்பட்டினம் வியாபாரி கப்பலில் அரிசியை ஏற்றிக்கொண்டு கொழும்புக்குச் சென்றார். திரும்பி வரும்பொழுது கொட்டைப்பாக்கு 10. பா. சுப்பிரமணியன் (ப. ஆ), மு. கா. நூல், தொகுதி 1. ப. 161.

11

தோ

தொகுதி 4. ப. 9.

12.ச.மோ, ஆ கு. தொகுதி 21. ப. 26.

13.கே.எம்.வேங்கடராமையா (ப. ஆ.), மு. கா. நூல். பக். 393 394

14.

ச.ம.மோ.ஆ. கு. தொகுதி 4. ப. 32.

15. கே. எம். வேங்கடராமையா (ய. ஆ ). மு.கா. நூல், தொகுதி 1, ப. 391.

காகிதச்சுவடி ஆய்வுகள்

249