உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17

16

ஏற்றிக்கொண்டு வந்தார் என்பதன் மூலம் இக்கப்பல் அதிராம்பட்டினம் வியாபாரியினுடையதாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இவ்வாண்டில் காதர்கட் மரக்காயரின் கப்பலுக்குப் பட்டணச்சேரியின் முத்தியான் உத்தரவின்றிக் கட்டுமரத்தை விட்டதனால் அபராதம் வங்கினது என்பதன் மூலம் காதர்கட் என்பவரிடம் கப்பல் இருந்தமையும். 7 கி. பி. 1777இல் மிஸ்தர் தான்வேல் ஸாமர்யேன் என்னும் வெள்ளைக்காரர் நமது இராஜ்யத்தில் நெல்லை வாங்கிக் கொண்டு,நாகூர். திருமுல்லைவாசல் துறைமுகத்திலிருந்து நெல்லைக் கப்பலில் ஏற்றிச் சென்னப்பட்டினத்திற்கு அனுப்புகிறார்18 என்பதன் மூலமும் தனியாரிடம் கப்பல் இருந்திருக்கலாம் என்பதை அறியமுடிகிறது.

ஏற்றுமதியும் இறக்குமதியும்

கி.பி. 1806இல் கொல்பேனா. மலாக்கா துறைமுகங்களுக்கு முத்துச்சிப்பி 15 தூக்கு. சாமிநாத செட்டியாரின் கப்பலில் நாகூர்த் துறைமுகத்திலிருந்து ஏற்றி அனுப்பினார். ஸேக் மயாரான்கதா என்பவருடைய கப்பலில் முத்துச்சிப்பி'5 தூக்கு அனுப்பப்பெற்றது' என்ற ஆவணச் செய்தியின் மூலம் தனிநபர்களிடம் இருந்த கப்பல்களில் இங்கிருந்து ஏற்றுமதிப் பொருள்கள் அனுப்பப்பட்டதை அறியமுடிகிறது.

19

இத்தகைய கப்பல்களின் மூலம் அயல்நாட்டு வாணிபம் சிறந்த முறையில் இருந்தது என்பதைச் சில ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.பி. 1803இல் சூலை 18ஆம் தேதி ஜேனஸ் ஸ்டூட் என்ற கப்பலில் ஒயின் சாராயம் அனுப்பப்பட்டுள்ளது. மேஸ்தர் பென்ஜாமின்துரியின் சாகேப் இவர்களுக்கு அன்னிய தேசத்திற்குச் சாராயப் பீப்பாய்கள் அனுப்பித்த செலவு 20 கி.பி. 1807இல் சென்னையிலிருந்து கப்பல் நாகூர்த் துறைமுகத்திற்கு வந்து சாமான்களை இறக்கி வெட்டாறு வழியாகப் பெரிய பெட்டிகளைத் தஞ்சாவூருக்குக் கொண்டு வருதல்21 என்ற செய்திகளின் மூலம் தஞ்சாவூரில் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெற்றுள்ளன என்பதும் விளங்குகிறது. இவ்வாறாகக் கப்பல் போக்குவரத்தின் மூலம் மராத்தியர் காலத்தில் தஞ்சாவூரிலிருந்து நெல் முத்துச்சிப்பி. அரிசி. சாராயம், மது பானங்கள் முதலான பல்வேறு பொருள்கள் கொழும்பு. மலாக்கா. கொல்பேனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் அங்கிருந்து கொட்டைப்பாக்கு போன்ற பொருள்கள் இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன.

கப்பலை ஓட்டிய மாலுமிகளுக்கு ஒரு மாதத்திற்கு 53 சக்கரம் சம்பளமாகக் கம்பெனியால் அளிக்கப்பட்டிருக்கிறது. கப்பலிலிருந்து நிலத்திற்குச் செய்திகள் அனுப்பக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

படகு கட்டும் தொழில்

பெரிய கப்பல்கள் மட்டுமின்றிச் சிறிய படகுகளும் உள்நாட்டுப் போக்கு

16 கே எம். வேங்கடராமையா (ப. ஆ). மு. க. நூல், தொகுகி 1 ப 392.

17. பா சுப்பிரமணியன் (. ஆ), மு.கா. நூல், தொகுதி 1. ப 161

கே. எம். வேங்கடராமையா ஆ). மு. கா. நூல், கொகுதி 1. ப. 392. மேலது, ப.391.

18

19

20

ச .ஈ. மோ.ஆ. கு. தொகுதி 20 பக். 9. 10.

21

பா சுப்பிரமணியன பே. ஆ!

கா.நூல், தொகுதி 1 ப 381.

250

காகிதச்சுவடி ஆய்வுகள்