உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரத்திற்காகக் கட்டப்பெற்றன. காவிரியாறு பல கால்களாய் ஓடி வளப்படுத்தும் மராத்தியர் ஆட்சியில் தஞ்சாவூரில் ஆறுகளைக் கடக்கப் பாலங்கள் இன்மையால் மக்கள் படகுகளிலேயே பயணம் செய்தனர். எனவே படகு கட்டும் தொழில் அக்காலத்தில் சிறப்புற்றிருந்தன.

கி. பி. 1754இல் காவேரி. அரசலாறு. கொள்ளிடம் ஆகிய இம்மூன்று ஆறுகளுக்கும் படகு தயார் செய்யவும்.22 கி.பி. 1768இல் சாதம்பங்குடித் துறைமுகத்திற்குக் கொள்ளிடத்தில் படகைக் கட்டவும், 23 கி. பி. 1811இல் விண்ணாற்றில் படகு விடுவதற்காகவும்24 செலவு செய்யப்பட்டன. மேலும் படகு செய்வதற்காகச் சாரங்கபாணி அய்யாவிற்கு 100 சக்கரம் கொடுக்கப்பட்டது. தவிர படகு வேலை, இதற்குக் காசிரட்டு (முரட்டுத்துணி) வாங்கியது. புதிய படகுகளைத் தயார் செய்து பூசை போடுதல், 25 சர்க்காரின் 2 படகுகளுக்குத் தார் தடவுதல்26 என்ற ஆவணச் செய்திகள் மூலம் தஞ்சாவூரிலேயே படகு கட்டப்பெற்றதை அறியமுடிகிறது.

கி.பி. 1814இல் திருவையாற்றில் புதிய படகு தயார் செய்ததைக் காரைக்கால் துறைமுகத்தில் நங்கூரம் போட்டு வைக்கப்படுவதால் அதற்குப் படகோட்டிகளை அனுப்புதல்.27 கி.பி. 1832இல் திவான்சாயேப் (இரண்டாம் சிவாஜி) கோடிக்கரையிலிருந்து சாலுவநாயக்கன் பட்டணத்திற்குச் சமுத்திரமார்க்கமாகப் படகில் உட்கார்ந்து வந்ததற்குப் படகுக்காரனுக்குக் கூலி வாடகை ரூ 16,28 படகு வேலையில் சிறந்தவர்களான காத்தான், மாரீ, கந்தன் என்ற மூவருக்கும் அவர்களது திறமையைப் பாராட்டி 3 சக்கரம் இனாம்29 என்பதன் மூலம் படகோட்டிகளுக்குக் கொடுக்கப்பட்ட கூலி விவரம் தெரிகிறது.

3

திருவையாறு. சரபேந்திரராச பட்டணம் போன்ற இடங்களில் படகுகள் தயார் செய்யப்பட்டன. ஒரு படகைத் தயாரிக்க 10001 ரூ செலவிடப்பட்டது. சரபேந்திரராச பட்டணத்தில் படகு ஒன்றைப் பழுது பார்க்க ரூ 535-0-3 செலவாயிற்று.

30

தோணி கட்டுதல்

படகுகளுடன் தோணிகள் அல்லது பரிசல்கள் என்பதையும் பயன்படுத்தியுள்ளனர். வேதாரண்யம், கோடிக்கரை முகாமிலிருந்து இரண்டு தோணிகள் தயாரிப்பதற்குப் புன்னைக்காய் மரங்களும் பலகையும் வருகின்றன. 'விட்டு விடுக' என்று சுங்கத்துறைக்கு 1811இல் ஆணை பிறப்பித்ததாக இருக்கும் குறிப்பு தோணிகள் செய்வதுபற்றி அறிவிப்பதாய் உள்ளது.5 கி. பி. 1826இல் கொள்ளிடத்தில்

31

22. பா. சுப்பிரமணியன் (ப. ஆ), மு.கா. நூல், தொகுதி 1. ப. 381.

23. மேலது ப 121. 24. மேலது. ப 192 25.மேலது.ப 139. 26. மேலது.ப 135.

27. மேலது.ப 11. 28.மேலது,ப. 356

29.மேலது. பக். 139. 140

30 ச.ம.மோ.ஆ. கு. தொகுதி 25. ப. 39.

31 கே. எம். வேங்கடராமையா (ப ஆ ). மு.கா. நூல். ப. 391.

காகிதச்சுவடி ஆய்வுகள்

251