உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வல்லத்தாத் தொரையில் பரிசிலை விடுகிற ஆசாமிக்கு 3032 என்பதன் மூலம் அவர்களுக்குக் கொடுத்த கூலிபற்றி அறியமுடிகிறது.

ஓடம் திருவாதி கொடமுரட்டிக்குப் புதிது செய்ய வேண்டும். கடகாலுக்குப் புதிதாக இருந்தும் கெட்டுப்போயிருக்கிறதைப் புதுப்பிக்க வேண்டுகிறது. கும்பகோணம், பாபநாசம் ஆறுகளுக்குப் புது ஓடம் செய்ய வேண்டும்33 என்பதன் மூலம் ஓடங்களும் தயாரிக்கப்பட்டதை அறியமுடிகின்றன.

முடிவுரை

தஞ்சாவூர் மராத்தியர்கள் காலத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்றது என்பதை மோடி ஆவணங்களின் துணைகொண்டு அறியமுடிகிறது. காரைக்கால். கோடியக்கரை. சரபேந்திரராச பட்டணம். நாகூர், நாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்றது என்பதையும் அறியமுடிகிறது. இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்திற்கு முன்னரே இத்தொழில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் இவர் காலத்தில்தான் தொழில்நுட்பங்களுடன் திறமையான ஆட்களின் உதவியால் இத்தொழில் மேலும் வளர்ச்சி பெற்றது. மக்கள் போக்குவரத்திற்கும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில் செல்வந்தர்கள் தாங்களே சொந்தமாகக் கப்பல்களை வைத்திருந்தனர். இத்தொழில் மூலம் வாணிபம் வளர்ச்சி பெற்றது தஞ்சாவூர் மராத்தியர்கள் இத்தொழிலுக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளனர்.

32 33.

252

பா சுப்பிரமணியன ப ஆ மு.கா.நூல், தொகுதி 1. ப.468

ம. மோ. ஆ. கு.தொகுதி 8 8

காகிதச்சுவடி ஆய்வுகள்