உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




த.அமுதா ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

நேருவின் கடிதங்கள்

முன்னுரை

நேரு தம் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் குடும்ப நலத்தையும். நிகழ்வுகளையும் கொண்டவை அல்ல; உலகளாவிய பார்வையில் தம் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் எழுதியுள்ளார். தமது நூல்களின் வழியாகவும், கல்விச்சாலைகளின் மூலமாகவும் தாம் அறிந்த உலக வரலாறு. இயற்கை நிகழ்வுகள், விலங்குகள், மனிதரின் இன, மொழி, வரலாறு. பண்பாடு. நாகரிகம். இன்னபிற தகவல்களை இளம் உள்ளத்தில் பதியும்வண்ணம் எழுதியுள்ளார். ஜவஹர்லால் நேரு தம் மகள் இந்திராவுக்கு எழுதிய 31 கடிதங்களின் மூலம் உலகப்போக்கையும் நோக்கையும் நன்கறிந்த இந்திரா பிற்காலத்தில் இந்திய நாட்டின் பிரதமராகத் திகழ்ந்தார். கடிதங்களின் மூலம் ஒருவரது வாழ்வைச் சீரமைத்துச் செழிப்பாக்கி வெற்றி கொள்ள முடியும் என்பதை இவரது வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. நேரு தம் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை சி.ரா.வேங்கடராமன் என்பவர் 'ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள்' என்ற தலைப்பில் தமிழில் நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூலை அடிப்படையாகக் கொண்டு இவர்தம் கடிதங்களில் உள்ள செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

இயற்கை தொடர்பான செய்திகள்

வரலாறு என்பது அந்நாட்டின் இயற்கை அமைப்பின் அடிப்படையில்தான் உண்டாக்கப்படுகிறது. மனிதன் இன்று இயற்கையை வென்று வெண்ணிலாவில் காலடி எடுத்து வைத்துச் சாதனைகள் பல புரிந்துள்ளான். பூமியின் இயற்கைத் தன்மையால் அவன் வரலாற்றை ஆட்டிப் படைக்கிறான். பூமிப்படத்தை உற்றுநோக்கும்போது சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கேற்பவே நாடுகளும் நாட்டு மக்களும் உருவாகியிருப்பதை அறியமுடிகிறது. ஒரு நாட்டின் வரலாற்றைச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளே உருவாக்குகின்றன. புவியியலே வரலாற்றியலை ஆக்குகிறது என்பதை அறியலாம்.

"ஒரு நாட்டின் வரலாற்றை அறிவியலின் அடிப்படையில் தெற்றென அறிய வேண்டுமானால்

காகிதச்சுவடி ஆய்வுகள்

அந்நாட்டின்

253