உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எஸ். பி. சண்முகம் டி. பி. எம். எஸ். கல்லூரி பொறையாறு

சுவடி நூலகங்கள்

நம் பண்பாட்டைக் காக்கும் பெட்டகங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. நாட்டு நடவடிக்கைகள் கோயில்களில் கல்வெட்டுகளாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்திற்கு உதவும் வகையில் சுவடிகளும் பல்வேறு கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன. முடியரசர்களும் தனிப்பட்ட பிரபுக்களும் தங்கள் முயற்சியால் சுவடிகளைச் சேர்த்து வைத்தனர்.

சமயப் பூசல்களாலும் வெளிநாட்டவர் படையெடுப்பாலும் சுவடி நூல்கள் பல பாதிக்கப்பட்டன. எதிரிகள் படையெடுப்பைக் கேட்டதும் கோயில் குருக்களும் பிறரும் ஏடுகளை எல்லாம் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். காலப்போக்கில் போற்றுவார் இல்லாமையால் இயற்கைச் சீற்றத்திற்கும் கரையான்களுக்கும் இரையாயின. மேலும் பயணிகள் என்ற பெயரில் சுற்றுலா வந்த பல வெளிநாட்டினர் நமது ஆயிரக்கணக்கான சுவடிகளை எடுத்துச் சென்று விட்டனர்.

இவற்றையும் மீறித் தனிப்பட்டோர் அரிய முயற்சியால் பழஞ்சுவடிகள் பல உலகெங்கிலும் அரிய நூலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை இலக்கியம், மருத்துவம், சோதிடம், அரசியல், தத்துவம், வரலாறு போன்ற பல துறைகளில் அமைந்துள்ளன. அவற்றைத் தொகுத்தும் பகுத்தும் இக்கால அறிவியல் முறைகளோடு ஆராய்ந்தால் பல அரிய கருத்துக்கள் கிடைக்கும். பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகம்-

இந் நூலகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இங்கிலாந்து பற்றிய பழமையான வரலாற்றுச் சுவடிகள். ஆங்கில அரசர்களின் கையெழுத்துக்கள், வெளிவராத ஆங்கிலேய எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியன அங்கு உள்ளன.

பாட்லியன் நூலகம்

இது இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது. இங்குக் கீழ்த்திசைக் கையெழுத்துப் பிரதிகள் அதிகமாக உள்ளன. இங்கிலாந்து இலக்கிய வரலாறு தொடர்பான கையெழுத்துப் பிரதிகளும் தொடக்க கால இலக்கியப் பிரதிகளும் அதிக அளவில் உள்ளன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

15