உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மாஸ்கோ லெனின் நூலகம்

மார்க்ஸ். லெனின் ஆகியோரது வாழ்க்கையோடு தொடர்பான ஆவணங்கள் இங்குச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. லெனினது கையெழுத்துச் சுவடிகள் பல்வேறு வழிகளில் பல நிலைகளில் இங்கு வந்து சேருகின்றன. அவற்றை மிகுந்த கவனத்துடன் பழைய நிலைக்கு மீட்டுப் பெட்டகங்களில் பாதுகாத்து வைக்கின்றனர் ஆய்வாளர்களுக்கு அதன் நகலை வழங்கி வருகின்றனர்.

இந்திய தேசிய நூலகம்

இந்தியாவில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான சுவடி நூலகங்கள் உள்ளன. கல்கத்தாவிலுள்ள இந்திய தேசிய நூலகத்தில் அராபி, உருது. வங்கம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் அரிய கையெழுத்துச் சுவடிகள் உள்ளன. தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை தமது வாழ்நாளில் பெரிதும் முயன்று சேர்த்து வைத்த அரிய சுவடிகள் இங்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டும் 15 சுவடி நூலகங்கள் உள்ளன.

டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூலகம், சென்னை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் மேலைநாட்டு முறைப்படி, மேலைநாட்டு அறிஞர்களும் போற்றும்வண்ணம், பழந்தமிழ் இலக்கியங்களை ஏட்டிலிருந்து மீட்டு அச்சேற்றித் தமிழ் உலகிற்குத் தந்தவர். திருவான்மியூரில் உள்ள இந்நூலகம் 'கலாசேத்திரா' என்றழைக்கப்படுகிறது இந்நூலகத்தில் சுமார் 1600 ஓலைச்சுவடிகளும் 600 கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன இந் நூலகம் இவற்றைப் பாதுகாத்து வருவதுடன் நூலாகவும் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது.

சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்

கி. பி 1798-1833இல் தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் ஒரு பேரறிஞர். அறிவு வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர். தமக்கு முன் ஆண்ட சோழ மன்னர்கள். நாயக்க மன்னர்கள், மராத்திய மன்னர்கள் ஆகியோர் சேர்த்து வைத்த நூல்களைத் தொகுத்தார். வெளிநாட்டிலிருந்தும் பல பழஞ்சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் சேர்த்தார். இது 1820இல் சரசுவதி மகால் நூலகமாக உருப்பெற்றது இன்று இந்நூலகத்தில் முப்பதாயிரம் கையெழுத்துப் பிரதிகளும். ஓலைச்சுவடிகளும் உள்ளன இவை தமிழ், வடமொழி. மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் உள்ளன இவைகளைப் பற்றிய பட்டியல்களும் உள்ளன. அச்சுவடிகளில் மருத்துவம், சோதிடம், இலக்கியம், இசை தொடர்பான சுவடிகள் உள்ளன. சுவடியுடன் மட்டுமல்லாது அக்கால ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. தஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் ஆட்சிமுறை, வரலாறு போன்றவற்றை விளக்கும் ஏடுகள் துணி மூட்டைகளாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இவை மோடி ஆவணங்கள்' என்றழைக்கப்படுகின்றன. இந்நூலகம். அரிய சுவடிகளிலிருந்து. மருத்துவம், இசை, இலக்கியம் தொடர்பான பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது.

16

காகிதச்சுவடி ஆய்வுகள்