உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை

சென்னை அரசினர் சுவடி நூலகத்தில் பலவகையான சுவடிகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அவை தமிழ், வடமொழி. தெலுங்கு ஆகிய மொழிகளில் அமைந்துள்ளன.

மறைமலையடிகள் நூலகம், சென்னை

இது தென்னகத்தில் தமிழ் மொழியில் வெளிவந்துள்ள சிறந்த நூல்கள் அனைத்தையும் கொண்டது. இந்நூலகம் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் புலவர்களின் படங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து வருகிறது. தமிழில் ஆய்வு செய்கின்றவர்களுக்கு இச்சுவடிகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. காகிதச் சுவடிகளில் காணலாகும் அரிய கருத்துக்கள்

காகிதச் சுவடிகள் பலவற்றை ஆராய்ந்தால் அவற்றுள் இலக்கிய வரலாற்று உண்மைகள் இருப்பது தெரியவரும். நூலாசிரியரது முழுமையான வரலாறும். அவரது பண்பு நலன்களும், படைப்புகளும் நன்கு புலப்படும் ஒரு நாட்டின் சுவடிகளை ஆய்வு செய்யும்போது அந்நாட்டு மக்களின் கலைப்பண்பாட்டுச் செய்திகள் கிடைக்கும். பிற நாட்டினர் ஆட்சியின்போது அந்நாட்டின் சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் தெரியும்.

மருத்துவம். உயிரியல், வானவியல், மொழியியல் போன்ற துறைகளில் அடைந்துள்ள வளர்ச்சியைக் காணலாம். அவற்றை இக்கால மருத்துவ முறைகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தால் பல அரிய செய்திகள் கிடைக்கும். மேலும் மக்களின் பொருளாதார வளர்ச்சி, வரி வருவாய் முறைகள், தரை, கப்பல் போக்குவரத்துப் போன்றவற்றை அறியலாம் அக்காலத் திருமடங்கள். ஆதீனங்கள் போன்ற அறநிலையங்களின் கொடைகளையும் அவற்றின் பயன்களையும் ஆராயலாம்.

இச்சுவடிகளை ஆராயும்போது நிர்வாக முறை, நீதி. சட்டங்கள் போன்றவற்றை உணரலாம். இவை அக்கால நிர்வாக முறை, நீதி, சட்டங்கள் கியவற்றில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவும்.

சுவடிகளை ஆராயும்போது மொழியின் வளத்தை நன்கு அறியலாம். பிற நாட்டினர் ஆதிக்கத்தால் மொழியில் ஏற்படும் மாற்றங்களை அறியலாம். மேலும் ஆன்மீக நெறிகள் தத்துவக் கோட்பாடுகள் ஆகியவற்றில் புதிய செய்திகளைக் காணலாம்.

அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் ஆற்ற வேண்டியவை

தனியார் வசம் இருக்கும் பல கையெழுத்துச் சுவடிகளைப் பெற்றுக் கணிப்பொறி மூலம் பதிவு செய்தல் வேண்டும். மேலும் அவற்றைத் தொகுத்தும் பகுத்தும் பட்டியல் இட்டு வைத்தால் ஆய்வாளருக்கு எளிதாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இவ்வரிய சுவடிகளைத் தற்கால அறிவியல் முறைப்படிப் பாதுகாத்து வைக்க வேண்டும். அவ்வாறு பாதுகாத்து காகிதச்சுவடி ஆய்வுகள்

17