உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருபவற்றை உலகெங்கிலிருந்தும் ஆய்வு செய்ய வருகின்றவர்களுக்குத் தாராளமாக வழங்க முன்வரவேண்டும்.

தனியாரிடம் இருக்கும் சுவடிகளை அவர்களிடமே வைத்துப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

பல மொழிகளில் இருக்கும் அச்சுவடிகளை அந்தந்த மொழி வல்லுநர்களைக் கொண்டு மொழியாக்கம் செய்தல் வேண்டும்.

சுவடியின் முழுமையான விவரங்கள் கிடைத்ததும் அவற்றை நூலாக்கம் செய்து தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும்.

அரிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருக்கும் இந்நூலகங்கள் தமிழ் ஆர்வலர்கட்கும் ஆய்வாளர்களுக்கும் பெரும் கருவூலமாகும். காலப் பழமையால் நலிவுறும் இப்பிரதிகளை மீட்டுத் தமிழுலகிற்கு அளிக்கும் அரிய பணியை உடனே தொடங்குதல் நலம் பயக்கும்.

18

காகிதச்சுவடி ஆய்வுகள்