உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ந.வேலுசாமி பதிவாளர்

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம்

காகிதச் சுவடியில் பயணக் குறிப்புகள்

ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்கும் பணிகளில் உள்ள தொல்லைகளுக்கும் உழைப்பிற்கும் சற்றும் குறைவில்லாதது. காகிதச்சுவடிகளைப் பதிப்பிப்பதிலும் உண்டு என்பது வெள்ளிடைமலை.

ஓலைச்சுவடி.காகிதச்சுவடி இவற்றில் வேறுபாடு ஓலை. காகிதம்

என்பவைதாம்.

மொத்தத்தில் ஓலைச்சுவடியும் ஆவணம்தான் GU GOOT LOST GOT (Document) காகிதச்சுவடியும் ஆவணம்தான். இந்த இரு ஆவணங்களிலிருந்தும் தோன்றியவைதாம் இலட்சக்கணக்கான அளவில் பெருகி நாம் அனைவரும் பயின்றுவரும் நூல்கள்.

சுவடி இயல்

சுவடி என்னும் சொல் கையால் எழுதிய நூலைக் குறிப்பது என்பர் ஆய்வாளர். அது ஓலையிலும் இருக்கலாம் காகிதத்திலும் இருக்கலாம். சுவடி என்பதற்குத் தோடு, மடல், ஓலை, ஏடு. இதழ் என்னும் பெயர்களை எழுதப்பெற்ற ஏட்டிற்கும் நூலிற்கும் ஆகுபெயர்களாய் வழங்கி வருவது போலச் சுவடி என்னும் பெயரும் காரணப்பெயராய் அமைந்தது எனலாம்.

சுவடு + = சுவடி சுவடு அதாவது அடையாளம் உடையது சுவடி. எழுத்துச்சுவடு உடையது ஆதலின் சுவடி எனப்பெறுகிறது.

"பஞ்சியங்கமலம் பூத்த பசுஞ்சுவடு உடைத்து மன்னோ" இந்த அடியில் அமைந்துள்ள சுவடு என்னும் சொல் பதிதலால் உண்டாகும் குறையினைச் சுட்டுகிறது.

சுவடி என்பது இணை, கற்றைக்கட்டு, பொத்தகம் என்னும் பெயர்களையும் பெறுகிறது. கையால் எழுதப்பெற்ற படிவம் சுவடு எனப்படும்' என்பதையும் இங்கே

1

2.

பூ.சுப்பிரமணியம், சுவடி இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, 1991, ப. 7 மேலது, ப.7.

3. மேலது, ப. 8.

காகிதச்சுவடி ஆய்வுகள்

19