உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எண்ணிப் பார்க்கலாம்.

பயணக் குறிப்புகளைத் தாங்கியுள்ள காகிதச்சுவடிகள்

பயணம் என்பது ஒருவரோ. பலரோ ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல் ஆகும். பயணிகள் பல்வேறு காரணங்கள் பற்றிப் பயணம் மேற்கொள்வர். அவ்வாறு பயணம் மேற்கொண்டவர்கள் அப்பயணம் பற்றி எழுதும் நூல்கள் பயணநூல்கள

இவ்வாறு

பயணநூல்கள் எழுதத் துணையாக இருந்தவை ஓலைச்சுவடிகளும் காகிதச்சுவடிகளுமேயாம். அவற்றில் மிகுந்த அளவில் பயணநூற்கள் எழுதுவதற்குப் பெரும் காரணங்கள் காகிதச்சுவடிகள் என்பது பயணநூல் ஆய்வால் தெளிவாகிறது.

நாட்குறிப்பு முறையில் கே. பி. எஸ். மேனன் 'மாஸ்கோ டைரி' என்ற நூலை எழுதியுள்ளார். இவரது பயணக்குறிப்புகளும், 'நடைப்பயணம்' என்னும் பெயரில் இருக்கும் 'கால்நடையில் 28,000 மைல்கள்'. 'எனது பர்மா வழிநடைப்பயணம்' ஆகிய இரு நூற்களும் மணியனால். கதை வடிவில் அல்லது கதை என்ற பெயரில் எழுதப்பெற்ற பயண நூல்களும்,4 பயணக்குறிப்புகள் அடங்கிய காகிதச்சுவடிகள் எனில் மிகையல்ல.

மக்கள் சீனத்தில் உள்ள தொழில்நிலைகளைப்பற்றிப் போகர் (சித்தர்) தம் பயணக்குறிப்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அஃதாவது, சீன நாட்டினர்

சோப்பு. கண்ணாடி ஆகியவற்றைத் தயாரித்து இருக்கிறார்கள். இருடினர்

உப்பு.

செம்மரத்தூள், செம்பு ஆகியவற்றைச் சேர்த்துப் புடவைக்குரிய வண்ணத்தைத் தயார் செய்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது. காகிதமும் தயாரித்துள்ளார்கள். என்பதைப் போகரின் பயணக்குறிப்புகள் காட்டுகின்றன.

5

பதிப்பிக்கப்பெற்ற பயண நூல்களில் பெரும்பான்மை சென்னையில் பதிப்பிக்கப்பெற்றவையாகவே இருக்கின்றன. கும்பகோணம், தருமபுரம். சேலம். சிவகங்கை. சிதம்பரம், கோயமுத்தூர், புதுக்கோட்டை, மதுரை, வேதாரண்யம், திருச்சி, இளையான்குடி, திருநெல்வேலி, காரைக்குடி, கண்டனூர், செந்தாரைப்பட்டி ஆகிய இடங்களிலும் நூல்கள் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றன.

வேறு மாநிலங்கள் என்ற வகையில் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவிலும், மகாராட்டிரத்தில் உள்ள மும்பையிலும் இரண்டு நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

வெளிநாடுகள் என்ற வகையில் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும், இலங்கையிலும் மூன்று நூல்கள் பதிப்புப் பெற்றுள்ளன.

வேறு சில நாடுகளிலும் தமிழ்ப் பயண நூல்கள் பதிப்பிக்கப் பெற்றிருக்கும் எனவும் நம்பலாம்.

4

5

ந வேலுசாமி. பயண நூல்கள்வழிப் பண்பாடு. தமிழ் நகர். ஈரோடு. ப. 5.

போக சித்தர், போகரின் பயணக் குறிப்புகள் (கி. பி 1550-1625). தமிழாய்வுக் கழகம். செந்தாரைப்பட்டி, 1980, பக் 42-43

20

காகிதச்சுவடி ஆய்வுகள்