உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பயணநூல் என்ற இலக்கிய வகைப்பாடு தோன்றிய விதம்

சங்க இலக்கியமாம் பத்துப்பாட்டில் உள்ள ஐந்து நூல்களில் திருமுருகாற்றுப்படை. பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை.

பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை இவைகள் வழிகளைப்பற்றிக் கூறியுள்ள பயண நூல்களாகும்.

சிலம்பில் கோவலன், கண்ணகி. கவுந்தியடிகள் மூவரும் செய்யும் பயணத்தை இளங்கோவடிகள் குறிப்பிடத் தவறவில்லை.

பின்னாளில் எழுந்த கெளதம புத்தர் அடிச்சுவட்டில். மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் என்ற நூல்கள் பயணக்குறிப்புகளைத் தாங்கியவைகளாகும்.

இவ்வாறு, பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல்களைப் பயண நூல்கள் என்றும். பிறவகை நூல்கள் என்றும் பட்டியல் படுத்தும் முறை. ஐரோப்பியர் தமிழகத்திற்கு வந்த பின்னர்தான் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பியர்களிலும் ஜான் மர்டாக் (John Murdouch) என்பவர்தான் அச்சான தமிழ் நூல்களையெல்லாம் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தி அண்மைக்காலம் வரையிலும் ஒவ்வொரு வகை நூல்களையும் தனித்தனியாகப் பட்டியல் தயாரித்து வைத்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.

6

இந்த ஆய்வாளர் அறிந்தவரை பயண நூல் வரலாறு சுமார் நூறாண்டுகளை உடையதாக உள்ளது. 1889ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரிய திவ்விய தேச யாத்திரைச் சரித்திரம்" என்ற நூல் தொடங்கி இன்றுவரை பயணநூற்கள் தோன்றியவண்ணம் உள்ளன அது இயல்பே.

1803 முதல் 1811 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த டாக்டர் லெய்டன் என்பவர் ஓலைச்சுவடிகளைத் திரட்டியுள்ளார். அவை தமிழ் உட்படப் பல மொழிகளில் ஆனவை. அச்சுவடிகளையும் கிழக்கிந்தியக் கம்பெனியர் விலைக்கு வாங்கி இலண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகத்தில் வைத்துள்ளனர்? என்ற குறிப்பு மிகுந்த சிந்தனைக்குரியதாக லெய்டன். சுவடிகளைத் தேடியே இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்திருக்கிறார் என்ற உண்மை புலனாகிறது.

அகராதி, இரசவாதம். இலக்கணம். இலக்கியம், கணிதம், சமயம், ஜாலம், சோதிடம். தோத்திரம், நாடகம். மருத்துவம், மாந்திரீகம், வரலாறு, அரிச்சுவடி ஆகியவற்றிற்கெல்லாம் சுவடிகள் இருக்கும்போது. பயணத்திற்குச் சுவடிகள் குறிப்பாகக் காகிதச்சுவடிகள் இருந்ததில் வியப்பேதுமில்லை எனலாம்.

பழைய ஏட்டுச்சுவடிகளில் செய்யுள்களையும், உரைநடைபோலத் தொடர்ச்சியாகவே எழுதியுள்ளனர். ஓலைச்சுவடிகளைத் தயாரிப்பதில் ஏற்படும் உழைப்பு. காலம் போன்றவற்றின் மிகுதியாலும், ஏடுகளின் அளவு குறைவாலும்

6.

ந.வேலுசாமி. மு. கா. நூல், ப. 2.

7. மேலது, ப்.3.

8.

பூ.சுப்பிரமணியம். மு.கா.நூல். ப. 67.

காகிதச்சுவடி ஆய்வுகள்

21