உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிக்கனம் தேவைப்பட்டது. ஆனால் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் அச்சிடப்பெற்றுள்ள நூல்களும், தாள்களில் எழுதப்பெற்றுள்ள சுவடிகளும் இவ்வாறே காணப்படுகின்றன என்ற குறிப்பு காகிதச்சுவடி பெற்றிருந்த இன்றியமையாத இடத்தைச் சுட்டும்.

சில பயணக்குறிப்புகள்

உள்நாட்டுக்குள்ளேயோ, வெளிநாடுகளுக்கிடையேயோ பயணம் மேற்கொண்ட தலைவர்களும், அறிஞர்களும், எழுத்தாளர்களும் விரிவாக எழுதுவதற்குக் காலமின்மையால் குறிப்புகளாகவே வைக்கப்பட்டுப் பிறகு அவை அப்படியே பயணக்குறிப்புகள்' என்ற பெயரோடு வெளிவந்ததுண்டு.

குறிப்பாகவும், சிறப்பாகவும் அவ்வாறு குறிப்பிடத்தகுந்த நூல் "பெரியாரின் அயல்நாட்டுப் பயணக்குறிப்புகள்" ஆகும். பெரியார் ஈ. வே. ரா அவர்களின் சோவியத் ரஷ்யா, செர்மனி, இங்கிலாந்துப் பயணக்குறிப்புகளே அவைகள்.

பெரியார் இப்பயணக்குறிப்புகளைச் சோவியத் ரஷ்யாவில் அவர் தங்கிய 66ஆவது நாள் தொடங்கி எழுதியுள்ளார்.

"பிரயாணக் குறிப்பு

19-04-32 USSR-ல் 66-வது நாள்

சோசசிட்டலிருந்து நேற்று மாலை மாஸ்கோவுக்குப் புறப்பட்டோம். 10 என்றவாறு பயணக்குறிப்புகளை எழுதத் தொடங்கியிருந்தார் பெரியார்.

பயணநூல்கள் அல்லது பயணக்குறிப்புகள் உரைநடையில் மட்டுமின்றிச் செய்யுளிலும் எழுதப்பட்டுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

பாரதிதாசன் 'மாவலிபுரச்செலவு' என்றும், அவருக்குப் பிறகு வா.மு. சேதுராமன் 'மலைநாட்டின் மீதினிலே' என்றும். 'அமெரிக்காவில் பெருங்கவிக்கோ' என்றும் வெளிவந்துள்ளனவற்றை ஈண்டு நோக்க வேண்டும்.

அமெரிக்கா சென்ற பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் சிகாகோ நகரையும் காணச் சென்றார். அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று, இந்தியப் பண்பாட்டு ஆன்மீகப் பெருமைகளைச் சிகாகோவில்தான் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் பிற நாட்டினருக்குச் சகோதர வாஞ்சையோடு வெளிப்படுத்தினார். இரண்டு, சிகாகோ நகரில்தான் மிகப்பெரிய நூலகம் உள்ளது. இந்த இரண்டையும் பெருங்கவிக்கோ,

என்றும்.

'வாரிசூழ நற்சிகாகோ வானகத் திருநகரில்

நேரிலே கண்டு தெளி நெஞ்சளர்ந்தேன் பாரினிலே விந்தை நகாகளிலே வேந்துநகர் ஈதேகான் தநத தவ சந்திப்புத்தான்"

9 பூ சுப்பிரமணியம, சுவடியும் பதிப்பும்'. பதினான்காவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை. தொகுதி 2, ப 162.

10

22

வே ஆனைமுத்து (ப ஆ). பெரியாரின் அயல்நாட்டுப் பயணக்குறிப்புகள். பெரியார் நூல்

வெளியீட்டகம், சென்னை, 1997, ப 2

காகிதச்சுவடி ஆய்வுகள்