உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அவர்களுக்கு வேலை செய்வது எளிதாகியது. புலால் உணவைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமற் போனது. விவசாயம் ஏற்பட்டதும் அதன் மூலம் பல தொழில்களும் ஏற்பட்டன. ஆண்கள் தோட்ட வேலை செய்தும், பெண்கள் ஆடு மாடுகளை மேய்த்தும் பால் கறந்தும் வந்தனர். அதிகப்படியான தானியங்களைச் சேகரித்து வைத்தனர். அக்காலத்தில் 'பாங்குகள்' இல்லை. நாணயங்களும் கிடையாது. எவர் ஒருவரிடம் அதிகமான தானியங்களும் ஆடு மாடுகளும் ஒட்டகங்களும் இருக்கின்றனவோ அவரே பணக்காரன் என்று மக்கள் எண்ணினர்.

ஒரு குழுவின் தலைவனுக்கு பேட்ரியாக் (Patriarch) என்று பெயர். இது இலத்தீன் மொழியிலுள்ள 'பேடர்' என்ற சொல்லிலிருந்து வந்தது. இதற்குத் தகப்பன் என்று பொருள். அவனே தன் ஜாதிக்குத் தகப்பனாகவும் தலைவனாகவும் விளங்கினான். 'பாட்ரியா' என்ற சொல்லும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான். இதற்கு 'தந்தை நாடு' அல்லது 'ஒருவன் பிறந்தநாடு என்பது பொருள்' குழுத்தலைவனது பதவி எப்பொழுது பரம்பரையாக ஆக்கப்பட்டதோ அப்போதே தலைவன் பதவி அரசப்பதவியாகியது. கடவுளே தம்மை அரசராக்கினார் என்று கூறிக் கொண்டனர். இதற்குத் 'தெய்வீக உரிமை' என்று பெயர்.

வட அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டிலுள்ள யுகடான் என்ற ஊரிலும் தென் அமெரிக்காவிலுள்ள பெரு என்னும் நாட்டிலும் சிதைந்துபோன பழைய கட்டிடங்களைப் பார்க்கலாம். எனவே யுகடானிலும், பெருவிலும் நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பது தெரியவருகிறது மக்கள் மெசபடோமியாவில் டைக்ரீஸ், யூப்ரடிஸ் நதிகளுக்கிடையிலும் இந்தியாவில் கங்கை, யமுனை நதிக்கரைச் சமவெளியிலும் குடியேறினர். அங்கு பெரிய நகரங்கள் உண்டாயின. அவர்களுக்கு உணவையும், நீர் வளத்தையும் கொடுத்த நதியைப் புனிதமாகக் கருதினர். எகிப்து நாட்டில் நீல நதியை 'எங்களப்பன் நிலன்' என்று வணங்கி வந்தனர். கங்கையைக் கங்கம்மா என்றும் அழைத்தனர்.

சிரியாவிலுள்ள டமாஸ்கஸ் புகழ்பெற்ற நகரமாகும். இன்றும் உலகத்திலுள்ள நகரங்களில் இந்நகரம் மிகவும் புராதனமானது என்றே கூறுகின்றனர். பிரயாகை. அலஹாபாத், பாட்னா, பாடலிபுத்திரம் இவை இந்தியாவின் புராதன இடங்களாகும். எகிப்து நாட்டில் முக்கோணக் கோபுரங்களும், லக்ஸாரில் பல கோயில்களும் இன்றளவும் உள்ளன. எகிப்து நாட்டு அரசர்களுக்குப் பரோக்கள் என்று பெயர். உலர்ந்த மானிடச் சவத்திற்கு மம்மி என்று பெயர் என்பது தெரிய வருகிறது.

நில அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும், இன அடிப்படையிலும். சமய அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் உலக நாடுகள் ஒன்றிணைந்து காணப்படுவதுதான் வரலாற்றுண்மையாகும். ஆனால் இந்தியா இவைகளில் வேறுபட்டிருப்பினும் தேசியம் என்ற அடிப்படையில் பண்பாடு என்னும் பாறையின்மேல் மிகச்சிறந்த ஒற்றுமையைக் கட்டியிருக்கிறது. நவீன அறிவியலும். அரசியலும் வளர்ந்துவரும் இந்நாளில் இந்தியா அத்தகைய நவீனங்களை உடனுக்குடன் பெற்று அவற்றின் வழி பாரம்பரியமாகக் காத்துவரும் அதன் காகிதச்சுவடி ஆய்வுகள்

259