உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒற்றுமையைக் காத்து மேலும் வலுப்படுத்தி வாழவேண்டும்.

முடிவுரை

பண்டித நேரு தம் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து அறியப்படும் செய்திகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.

1. உலகத் தோற்றத்தில் சூரியனும், பிற கோள்களும் சூரிய மண்டலத்தில் உருவான வரலாற்றினைத் தெளிவுபடுத்துகின்றார்.

2. உலகத்தின் தொடக்க கால வரலாற்றினை அறியப் பயன்படும் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கம் தருகின்றார்.

3 மனிதன் தோன்றிய வரலாறு மற்றும் அவன் எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதையும் விளக்குகின்றார்.

4. ஜாதிகள் தோன்றிய விதம் பற்றியும் மொழிகள் எவ்வாறு உருவானது என்பது பற்றியும் கூறுகின்றார்.

5 சமயம் உருவான விதம். விவசாயத்தின் தோற்றம், மக்களின் நாகரிக வளர்ச்சி போன்றவற்றைத் தெளிவாக விளக்குகின்றார்.

பண்டைய உலகத் தோற்றம், விலங்குகள். மானிட இனம், பண்பாடு. மொழிகள். இயற்கை மற்றும் வரலாற்றுச் செய்திகளை அறியமுடிகின்றது. இதனால் கடிதங்களிலிருந்தும் ஒரு பொருள் பொதிந்த நூலைப் பெறமுடியும் என்பது புலனாகிறது

நேருவின் கடிதங்களில் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஒருவருடைய நலத்தையும் மற்றும் சொந்தத் தகவல்களையும் கடிதங்களில் பரிமாறிக்கொள்ளும் நிலையில் நேருவின் கடிதங்களில் இவ்வளவு செய்திகள் அடங்கியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

260

காகிதச்சுவடி ஆய்வுகள்