உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தி.மகாலட்சுமி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

சென்னை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் காகிதச் சுவடிகள்

உயர்தமிழ் ஆய்வுக்கு வழிவகுக்கும் வகையில் 1972இல் தொடங்கப்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் பலவகைப்பட்டன. இவற்றுள் சுவடியியல் ஆய்வும் அடங்கும். அவ்வகையில் இந்நிறுவனச் சுவடிப்புலத்திற்கு முதன்முதலில் கால்கோளிட்டவர் இந்நிறுவன மேனாள் இயக்குநர் ச. வே. சுப்பிரமணியன் ஆவர். அவரது முயற்சியால் ஓலைச்சுவடிகள் திரட்டப்பெற்றன. 1979இல் சுவடியியல் பட்டய மேற்படிப்புப் பட்டயக் கல்வி தொடங்கப்பெற்று. 1980 முதல் சுவடிப் பதிப்புகளும். சுவடிப் பதிப்பு நூல்களும் வெளிவரத்தொடங்கின. அதுபோது டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூலகத்துடன் இணைந்து திங்கள்தோறும் சுவடியியல் கருத்தரங்குகளும் நடத்தப்பெற்றன. 1984 முதல் உ. வே. சாமிநாதையர் பெயரில் அமைக்கப்பெற்ற அறக்கட்டளையின் சார்பில் சுவடிப் பதிப்புத் திறனாய்வு நூல்களும் வெளிவரத் தொடங்கின. இதே காலகட்டம் சுவடி அட்டவணை, சுவடிப் பாடநூல் எனும் பரிமாணங்களுக்கும் வித்திட்டது.

இதுகாறும் 44 சுவடிப் பதிப்புகளும், 80க்கும் மேற்பட்ட சுவடிப் பட்டய ஆய்வேடுகளும் வந்துள்ளன. 33 ஆய்வேடுகள் நிறுவனத்திலுள்ள சுவடி நூல்கள் இவற்றுள் 4 தாள் சுவடிகள், 2 ஆய்வேடுகளாகத் தரப்பட்டுள்ளன. அச்சானவற்றுள் 11 நூல்கள் இந்நிறுவனச் சுவடிகள். இவற்றுள் 8 ஆய்வேடுகளாகத் தரப்பெற்றுப் பின் நூலாக்கப் பெற்றவை.

காகிதச் சுவடிகள்

இந்நிறுவனச் சுவடிக் காப்பகத்தில் ஏறக்குறைய 600 சுவடிக் கட்டுகளும். அவற்றில் 950க்கும் மேற்பட்ட நூல்களும் உள்ளன. இவைதவிர 27 காகிதச் சுவடி நூற்கட்டுகளும். அவற்றுள் 58 நூல்களும் உள்ளன. பொருண்மை அடிப்படையில் நான்கு தொகுதிகளில் வெளிவந்துள்ள (4ஆம் தொகுதி அச்சில்) இந்நிறுவனச் சுவடிகளின் விளக்க அட்டவணையில் இக்காகிதச் சுவடிகளின் அட்டவணையும் இடம்பெற்றுள்ளது.

அளவு

கட்டபொம்மு கும்மி என்ற நூல் 18 × 5 செ. மீ. நீள அகலமும், 3 மி. மீ காகிதச்சுவடி ஆய்வுகள்

261