உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பருமனும் உள்ள 4 நோட்டுகளில் எழுதப்பெற, அயோத்தி கதையும் ஏறக்குறைய இதே

நோட்டுகளில் 37 நூல்கள் இடம்பெற, பிற,

அளவில் அமைகிறது. 33 × 22 செ.மீ. நீள அகலமும் 3.5 மி. மீ. பருமனும் உள்ள 8 நோட்டுகளில் 37 நூல்கள் இடம்பெற, பிற நூல்களின் நீள அகலம் ஏறக்குறைய இதே அளவில் அமைகிறது.

குலால புராணம், வைகுண்ட அம்மானை. கட்டபொம்மு கும்மி, பதார்த்த குணசிந்தாமணி, மருத்துவக் குறிப்புகள். மருத்துவத் திரட்டு போன்ற நூல்கள் பெருநூல்களாகவும்: ஞான கற்பம் 222, திருஏரகப் புராணம். சிற்ப சாத்திரம், சோமவார நாடகம், நம்பிராயன் கதை போன்றன ஓரளவு பெரிய நூல்களாகவும்; பூந்தாது. போத வாக்கியம், சதுர்கோணமாலை போன்றன சிறு நூல்களாகவும்; பரம ஞானம், கம்பு சூத்திரம். கந்தனுடைய நூலருமை. தண்டகம் நூற்றில் ஞானம் போன்றன மிகச்சிறு நூல்களாகவும் உள்ளன.

நூல் விளக்கம்

இந்நூல்களுள் 17 நூல்கள் அச்சானவை. 29 நூல்கள் அச்சாகாதவை. பிற 12உம் அச்சானதாகத் தெரியவில்லை. அச்சானவற்றுள் நான்கு மட்டுமே நிறுவனக் காகிதச் சுவடிகள் நல்ல நிலையிலுள்ள நிறுவனக் காகிதச் சுவடிகளுள் 54 முழுமை பெற்றும. 14 முழுமை பெறாமலும் உள்ளன. இவற்றுள் 40 நூல்கள் செய்யுள்களாகவும், 17 நூல்கள் உரைநடைகளாகவும். 7 நூல்கள் பாடலும் உரைநடையும் கலந்தவையாகவும் உள்ளன. உரைநடை - செய்யுள் (1 : 14), செய்யுள் - உரைநடை (1: 10), உரைநடை செய்யுள் - உரைநடை (6. 35) என்றவாறு பாடலும் உரைநடையும் கலந்துள்ளதேயன்றிப் பாடல். பாடலுக்குப் பொருள் என்றவாறு எந்நூலும் இல்லை.

சித்தர்

நந்தி தேவர். அகத்தியர். இராமதேவர், கொங்கணர், திருவள்ளுவர். தட்சிணாமூர்த்தி, சிவசுப்பிரமணியர் ஆகிய சித்தர்களின் பெயர்களில் மருத்துவம். ஞானம் தொடர்பான நூல்கள் உள்ளன. நந்தி தேவர். திருமூலருக்கு அருளிச் செய்ததாகவும் (1 4 10 12. 13) சிவசுப்பிரமணியர் அகத்தியருக்கு அருளியதாகவும் (1: 17) சில நூல்களில் கூறப்பெறுகின்றன. போத வாக்கியம் (1. 11) என்ற நூல் இறுதியில் சுப்பிரமணியர் கும்பமுனிக்கு அருளிச் செய்தார் என்றும் கூறப்பெறுகின்றது. சுப்பிரமணியர் என்பது முருகக் கடவுளைக் குறிப்பதாயின் இந்நூல் ஆசிரியர் அகத்தியர் ஆதல் வேண்டும். இதுபோல் நந்தி அருளிய நூல்களின் ஆசிரியர் திருமூலர் ஆதல் வேண்டும்.

திருநந்தி அருளிச்செய்த அல்லது உபதேசித்த என்பது சைவமரபு. சுப்பிரமணியர் அகத்தியருக்கு அருளிச்செய்த என்பது கௌமார சமயமரபு நந்தியை முன்னிறுத்துவது நூல் காலத்தால் முற்பட்டது எனவும். தமிழ்க் கடவுள் முருகனை முன்னிறுத்துவது நூலின் தரத்தை, மதிப்பை உயர்த்துவது எனவும் கருத இடமளிக்கிறது

வரலாறு

262

காகிதச் சுவடிகளில் 9 நூல்கள் கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி காகிதச்சுவடி ஆய்வுகள்