உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூலகம் (7), ஆசியவியல் ஆய்வு நிறுவனம் (2) ஆகியவற்றிலுள்ள ஓலைச்சுவடிகளின் நிழற்படப் பிரதிகள். ஏனையவை கையெழுத்துப் பிரதிகள். படியெடுத்தவர்கள் ஓலைச்சுவடிகளின் ஏட்டெண்களைப் போட்டு எழுதும் முறையினைப் பின்பற்றியுள்ளனர். இதன்வழி 11 நூல்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து படியெடுக்கப் பட்டதையும் விடுபட்ட ஏடுகள் விவரத்தையும் ஏடுகள் விடுபட்ட நூல்கள் 20:51:3: 27:3:29; 4:30) அறியமுடிகிறது. குலால புராணம் என்ற ஒன்றைத் தவிரப் பிற நிறுவனச் சுவடிகளுக்குக் காகிதச் சுவடிகள் இல்லை.

5 நூல்கள் காகிதச் சுவடியைப் பார்த்துப் படியெடுக்கப்பட்டவை.

காட்டு 'புரசைவாக்கத்தைச் சேர்ந்த எல். ஆர் சுப்பிரமணியம் என்பவருடைய காகிதப் பிரதியைப் பார்த்துப் படியெடுக்கப்பட்டது (2 : 16-20)." து

பிற நூல்களின் படியெடுக்கப்பட்ட விவரம் அறிய இயலவில்லை. மேற்சுட்டிய காட்டின்வழி ஐந்து நூல்களின் (2: 16-20) உரிமையாளர் சுப்பிரமணியம் என்பதும். "திருபியாகு ராம்பிரசாத் அவர்களின் மருத்துவக் குறிப்புகள் (5: 32-34)" என்பதன்வழி இதன் ஆசிரியர் இவர் என்பதும் தெரிகிறது.

துறையூர் விருத்தாசலம் குமாரதேவர் மடத்துச் சுவடியின் பிரதி 17:36). பாண்டிச்சேரி இன்டாலஜி நிறுவன ஒலைச்சுவடிப் பிரதி (24:55-56) என்ற குறிப்புகள் எந்தெந்த இடங்களிலிருந்து சுவடிகள் கிடைத்தன என்பதைக் காட்டுகிறது

சிற்றிலக்கிய நூல்களைப் (18 : 47-49) படியெடுத்ததுடன் நிறுவனத்திற்குக் கடிதத்தின்வழி 09-12-80இல் அனுப்பியவர் நெய்க்குப்பிக் கிராமக் (வீராபுரம் அஞ்சல், வெள்ளி மேட்டுப்பட்டி, திண்டிவனம்) கணக்குப்பிள்ளையாகிய ஆர். சண்முகம்பிள்ளை. நூல் ஆசிரியர் வைரபுரம் திண்டிவனம் வட்டத்தைச் சார்ந்த இராம. சண்முகம்.14-03-1937ஆம் ஆண்டு திருக்கோவலூர் ஸ்ரீபாணி பாத்திரதேசிகராதீன மேல்மடத்து வித்வான் ஆ. பழநிஸ்வாமி சிவாச்சாரியார் வழங்கியுள்ள மதிப்புரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. கம்பு சூத்திரத்தைப் படியெடுத்தும். நேரில் வந்து கொடுத்தும் உதவியவர் கூடலூர் அ. அருணாசலம். குலால புராணத்தை ஓலைச்சுவடியாக அளித்தவர் தமிழூர் சி. இலட்சுமணன்: படியெடுத்தவர் அந்நாள் சுவடிப் பட்டய மாணவர் சென்னி துரேந்திரநாதன்,

நூல் தலைப்பு

நூற்பெயர் இல்லாதவற்றிற்கு அந்நூற்செய்திகளை உட்கொண்டு வழங்கப்பட்ட தலைப்புகள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.

குஷ்டநோயும் மருந்தும் 1:1

(சில நோய்களும் சில மருந்தும்) 1 :2

எழுத்து மயக்கம்

காகிதச் சுவடிகளைப் படியெடுத்தவர்கள் ஓரளவு பிழை களைந்தும், அடி. சீர் பிரித்தும் எழுதியுள்ளனர். இருப்பினும் கவனமின்மை, எழுத்துகளைப் புரிந்து கொள்வதிலுள்ள இடையூறு போன்றவற்றால் இவர்களாலும் சில தவறுகள் காகிதச்சுவடி ஆய்வுகள்

263