உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூல்களின் பிரதிகள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆயின் இங்ஙனம் உருவாக்கப்பட்ட பல நூல்கள் தனிநூல் அமைப்பிலே முழுமை பெற்றும் காணப்படுகின்றன (குணவாகடம். 2.68:96). இங்ஙனம் சிறு நூலிலிருந்தும். பெரிய நூலிலிருந்தும் தனிநூல் அமைப்பில் நூற்றுக்கணக்கான நூல்கள் உருவாகியுள்ளன. மேலும் பல நூற்செய்திகளைத் தொகுத்து ஒரு நூல் உருவாதல். பிற நூற் செய்திகள் உரைநடையில் உருவாதல் என்ற நிலைகளைக் கருத்தில் கொண்டால் அச்சாகாத நூல்களின் எண்ணிக்கை அறுபது விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும். சைவ தத்துவம்

அச்சாகியுள்ள நாதாந்தத் திறவுகோல் என்ற நூல் நாதமாகிய ஓங்கார ஒலியைக் கடந்து அதாவது நாதாந்த நிலையைக் கடந்து சோதி வடிவான இறையைக் காண்பதற்கான வழிமுறையைக் கூறுகிறது. இந்நூலில் காப்புப் பாடல் நீங்கலாக 1 - 41 பாடல்கள் இடம்பெற்று முற்றும் என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது இதே பெயரில் அமையும் நிறுவன ஓலைச்சுவடியில் (79 : 177) காப்பு உட்பட 99 பாடல்கள் இந்நூலும் முழுமை பெற்றுள்ளது. இரு நூல்களிலும் முதலிரண்டு பாடல்கள் ஒன்று போலவே

உள்ளன.

அங்கவியல்

ஸ்ரீரிகளின் சரீரலட்சணம் (1: 9) என்ற அங்கவியல் பற்றிய நூல் அச்சாகாதது. அகத்தியர் சுப்பிரமணியக் கடவுளிடம் பெண்களில் பதிவிரதை யாரென்று திருமணத்திற்கு முன் அறிவது எப்படி என்று கேட்க இறைவன் அருளிச் செய்த வசன காவியம் இது என்பதனை நூல் தொடக்கத்தின் வழி அறியமுடிகிறது. பெண்களுடைய கைரேகை. முகம், கூந்தல், உடற்சுழி முதலான உறுப்புகளின் அமைப்பு, தன்மை முதலியவற்றின் வழி அவர்களது குணம், உடல் தன்மை. உடல் நலம். ஆயுள். பொருளாதாரம் முதலியன இதில் கண்டறியப்படுகின்றன.

மனைநூல்

அச்சாகாத சிற்ப சாத்திரம் என்ற நூல் தொடக்கப் பகுதிகள் இல்லையெனினும். உள்ள செய்திகள் அறுசீர் விருத்தத்தில் 641ஆவது பாடல் முதல் 1204ஆவது பாடல் வரை தொடர்ச்சியாய் அமைந்து முற்றுப்பெற்றுள்ளது இந்நூல் மயமதம் என்ற நூலின் சிறப்பையும். மயனுடைய நெறியையும். வீடு கட்டும் இலக்கணத்தையும், மயனின் புகழையும் விதந்தோதுகிறது.

ஆரூடம்

சித்தினாரூட சிந்து என்ற நூலில் உலகிலுள்ள விசச் செந்துக்களின் பெயர்கள், விசங்களின் கொடிய தன்மைகள், பாம்பு கடித்த நேரம். தோன்றும் அறிகுறிகள். மரணத்திலிருந்து மீளுவதற்கான மந்திர. தியான. மருத்துவ முறைகள். பாம்பு கடித்தால் மீள முடியாத நட்சத்திரங்கள். திதிகள், விசச் செந்துக்களிடமிருந்து தப்பிப் பிழைத்தால் உயிரோடிருக்கும் காலம் முதலான செய்திகள் கூறப்பெற்றுள்ளன..

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளில் நிறுவனக் காகிதச் சுவடிகள் கிடைத்த வரலாறு அவற்றின் அமைப்பு முறை. அச்சான விவரம். அச்சாகாத நூற்களின் சிறப்பு. காகிதச்சுவடி ஆய்வுகள்

273