உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாடியிட ஜெயவாக்குப பெருவ ரின்னூல்

பயனருகில் மெஞ்ஞானத் தலைவா ஆமே (பா. 11)

என்ற இப்பாடலால் தெரியவருகிறது. திருவிளையாடல்களில் ஒன்றான விண்மணி அளந்த நிகழவு ஈண்டு ஆசிரியரால் நினைவுகூரப்படுவது அவருக்குள்ள சைவ சித்தாந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது

ஜெனன சக்கரம் 11: 13) என்ற இந்நூல் 186: 386 என்ற எண்ணுடைய ஓலைச்சுவடி போன்றதே. தத்துவம் (1: 12) என்ற நூல் 141 : 311 என்ற எண்ணுடைய ஓலைச்சுவடி போன்றதே

மாணிக்கவாசகரின் ஞானத்தாழிசை (, 6) என்ற நூல் 334 : 566 என்ற எண்ணுடைய ஓலைச்சுவடி நூலினைப் போன்றதே. ஒரு நூலுக்குப் பல பிரதிகள் உருவாகும்போது அவற்றில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது கண்கூடு. காட்டாக மேற்சுட்டிய இரண்டு நூல்களைக் காண்பது பொருந்தும்.

தாள் சுவடியில் நூல் தலைப்பு மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிச்செய்த ஞானத் தாழிசை என்றும். ஒலைச்சுவடியில் மாணிக்கவாசகரருளிச் செய்த ஞானம் - தாழிசை என்றும் உள்ளன. தாள் சுவடியில் 10 பாடல்களும் ஓலைச்சுவடியில் 11 பாடல்களும் உள்ளன. ஓலைச்சுவடியில் வரும் பத்தாம் பாடல் தாள் சுவடியில் இல்லை. இரு நூல்களிலும் முதல் இறுதிப் பாடல்களிலுள்ள பாடவேறுபாடுகளைக் காட்டிலும் மிகுதியான பாடவேறுபாடுகள் பிற பாடல்களில் இருக்கின்றன. பாடல்களே வேறுவேறு என்று எண்ணக்கூடிய அளவிலும் சில பாடல்கள் உள்ளன. பாடல் எண்களின் அமைப்பு முறையிலும் மாறுபாடுகள் உள்ளன.

தாள் சுவடி

ஓலைச்சுவடி

1

1

3

2

9

6

7

MO

3

4

5

6

3

7

8

2

LD C

9

10

10 11

பாடல்கள் முறைமாறி இடம்பெற்றிருப்பினும் பொருளை அறிந்து கொளவதில் இடையூறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே பொருள் தொடர்ச்சி என்றில்லாமல் ஞானத்தை அறிவுறுத்தும் வகையில் நூல் அமைகிறது என்பது தெரிகிறது.

அகத்தியர் தண்டகம் நூற்றில் தொல்லிய ஞானம் அறியவும் (1:5), கொங்கணர் பரமஞானத்தில் சொல்லியது (1 : 8) என்ற தலைப்புகளின்வழி இவை வேறு வேறு காகிதச்சுவடி ஆய்வுகள்

272