உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழுக்கும். மருத்துவ உலகுக்கும். சுவடி ஆய்வார்க்கும் பெரிதும் பயன்தரும் மருந்து செய்முறைகளைத் தேர்ந்து சோதிக்க. மாற்று மருந்து செய்முறைகளை அறிய மிகவும் பயனுடையதாக இருக்கும்.

மந்திரம்

செய்யுள் வடிவிலான சர்வசம்ஹார விஞ்சையில் (2 . 22) சர்வ சங்கார மந்திரத்தைக் கற்கும் முறையும், அடையும் நன்மைகளும் கூறப்பெறுகின்றன. மேலும் பிள்ளையுண்டாக. வயிற்றில் இறந்த குழந்தை வெளிவர, ஏவல் பில்லி சூனியம், கண்ணேறு. சுரம், சன்னி, குட்டம் முதலியன அண்டாதிருக்க மந்திரத்துடன் கூடிய மருத்துவ வழிமுறைகளைக் கூறுகிறது இந்நூலும், மாந்திரீகம் என்ற நூலும் அச்சாகாதவை.

ஞானம்

.

சித்தர் பெருமக்கள் தங்களுடைய ஞானயோக மார்க்கத்திற்குத் தொன்மையான சைவ சமய தத்துவத்தையும். நான்கு வேதங்கள் சொன்ன வேதாந்த தத்துவங்களையும் பயன்படுத்திக் கொண்டு ஞானம். யோகம் ஆகியவற்றில் தெளிவும் விளக்கமும் அறிதற்பொருட்டுப் பல்வேறு நூல்கள் செய்தனர். பின்வந்தோர் அவர்களது கருத்துக்களோடு தங்களது கருத்துக்களையும் இணைத்துச் சொல்லியுள்ளனர். இவ்வகையில் எழுந்த ஞானம் தொடர்பான அரிய நூல்கள் பல வெளியிடப்படாமலே உள்ளன. இப்பொருண்மையிலுள்ள 11 நூல்களும் அச்சாகாதவைகளாகவே தெரிகின்றன.

இவ்வுலகு தோன்றிய விதம். பஞ்சபூதச் சேர்க்கையால் நிகழும் நிகழ்வுகள் (1 4). கருத்தோற்றம். உருவ அமைப்பு, ஆயுள். வீடுபேறு (1 . 3). துன்பங்களை. பந்தங்களை விலக்கி யோகவழி நின்று சித்துக்கள் கைவரப்பெற்றுச் சோதி வடிவான இறையை அடையும் முறை (1 11:1: 12). மருத்துவத்திற்கு ஞானமார்க்கத்தின் தேவை (1:5). அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள இறைத் தத்துவத்தோடு கூடிய தொடர்பு (1. 10). விந்து. நாதம். கருவாசல். பிறவாநெறி போன்ற ஞானமார்க்கத்திற்குரிய சிந்தனை (1:6). பிறவியிலிருந்து விடுபட்டு முத்தி அடையும் வழிமுறை (1 7), பிரபஞ்ச அளவை (1: 14). யோகமார்க்கத்தால் விளையும் ஞானத்தின்பாற்பட்ட உச்சிநீர் சுரத்தல் (பேரின்ப ஊற்று) (1 : 15) போன்றவை இந்நூற்களில் விளக்கம் பெறுகின்றன.

மானுடர் பழவினையை நீக்கவல்லது சதுர்கோண மாலையாகிய நூல் (1:7) என்பதும், நான்முகனும். திருமாலும் அளந்து காணமுடியாத ஆடல்வல்லானின் அருட்பொலிவினை எண்ணித் துதிப்போர் வாக்குச் சுத்தி பெறுவர் என்பதும் இந்நூலின் இறுதியில் அமையும்.

தேடறிய திருமேனி அயனும் மாலும்

தேடியறி யாப்பழம் பொருளே நீயும்

தேடிய காலாடிய பொற்சிவந்த பாதம்

பாடிவிடாய் நெஞ்சகமே இந்தப் பத்தும்

தெரிசித்துச் சதுற்கோண மாலை பத்தும்

படிப்பவர்கள் பழவினைகள் எல்லாம் ஒழிந்து

271

காகிதச்சுவடி ஆய்வுகள்