உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுமட்டுமன்றி ஒரே நூல் இவ்விரண்டு ஆசிரியர்களின் பெயர்களிலும் இருப்பதைப் பல நூல்களில் காணமுடிகின்றது.

காட்டு :

அகத்தியர் சூத்திரம் முப்பத்திரண்டு (ச. 129.6) தட்சிணாமூர்த்தி 30 (த 501)

ஓரே நூல்

ஒரே நூல் அகத்தியர், கொங்கணர், தேரையர். திருமூலர் போன்றோர் பெயர்களில் அமைதலைச் சுவடிகளில் ஆங்காங்கே காணத்தான் செய்கிறோம்.

காட்டு:

ஆசிரியர் சூரிய வாகட வெண்பா தேரையர் நோயின் சாரம்

ஒரே நூல்

இருப்பினும் அகத்தியரின் நூல்கள் தட்சிணாமூர்த்தி பெயரிலும் கிடைப்பதே பரவலாகக் காணப்படுகின்றது.

எனவே அகத்தியரின் வேறு பெயராகத் தட்சிணாமூர்த்தி என்ற பெயர் இருக்க வாய்ப்பு இருப்பதால் மேற்சொன்ன சூத்திரம் பத்து' என்ற நூல் இவ்விருவர் பெயரில் அமைதல் ஏற்புடைத்தே. ஆயின் இந்நூல் இராமதேவர் பெயரிலும் கிடைக்கின்றது. இந்நூலுக்குக் கிடைக்கும் மாற்றுச் சுவடிகளில் பல இராமதேவர் பெயரிலேயே கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றான 'ராமதேவர் ஆயிரத்தில் சூத்திரம் பத்து (ச.289 A) என்ற நூலைப் பார்க்கும்போது இந்நூல் இராமதேவர் நூலாக இருத்தல் கூடும் என்ற எண்ணத்திற்கும் இடமளிக்கிறது

ஒரு நூலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் என்ற நிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஓரளவு அறிய முடிந்தபோதிலும் மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.

இத்திரட்டுகளிலுள்ள மருத்துவக் குறிப்புகள் தெளிவுடனும், வட்டார வழக்கை எதிரொலிப்பதாகவும் உள்ளன.

வட்டார வழக்கு :

குழுரக்காய்த்தெடுத்து (5: 32, பக்.4)

மூணுவிசை 15:32. பக்.2)

குறுசினி ஓமம் (4: 30, பக். 6)

கொதிக்க வைத்து

மூன்று முறை குரோசாணி ஓமம்

மேலும் இந்நூல்களில் எளிய நடையிலான அரிய. புதிய மருத்துவ முறைகள் சொல்லப் பெற்றுள்ளன இவற்றுள் பல பாமர மக்களும் புரிந்து தயாரிக்க முடிந்த மருத்துவக் குறிப்புகளை. மருந்து செய்முறைகளை விளக்குவனவாக விளங்குகின்றன. அவை எளிய முறைகளே ஆயினும் அவற்றையெல்லாம் ஆய்வுக்குட்படுத்தி வெளிப்படுத்தும் நிலை விரைந்து உருவாகுதல் வேண்டும். இவை அனைத்தும் தனித்தனி நூல்களாக வெளிவரும் தகுதி படைத்தனவே. இருப்பினும் குஷ்டம். நீரிழிவு, மஞ்சள் காமாலை. இரத்தக் கொதிப்பு. காலரா பேதி. கண் நோய், காசநோய்,

தலைவலி, பல்வலி, விசக்கடி, வசிய மருந்து. பறபம், செந்தூரம், குளிகை, சுத்திமறை

முதலான தலைப்புகளில் இந்நூல்களில் கிடைக்கும் செய்திகளோடு பிற நூற் செய்திகளையும் வகுத்து தொகுத்து. தனித்தனி நூல்களாகக் கொண்டுவரின் காகிதச்சுவடி ஆய்வுகள்

270