உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருத்துவர்களின் பட்டறிவு அனுபவங்களால் குவிக்கப்பட்டுள்ள இத்திரட்டுகளை மருத்துவத் தீபிகை எனலாம்.

குஷ்ட நோயும் மருந்தும் (1: 1) என்ற நூலில் தொழுநோய் பற்றியும் அதற்கான மருத்துவ முறையும் கூறப்பெறுகின்றன. இந்நோய் தோன்றி வெளிப்படும் முறை. குணம் என்பதும். அசாத்திய குஷ்டங்கள் தவிர மற்றெல்லா வகைக் குஷ்டங்களுக்கும் துவாதச் செந்தூரம் பயன்படும் என்பதும். அதன் விளக்கமான செய்முறையும் இந்நூலின் சிறப்பை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.

சுகாதாரக் களஞ்சியம் (5:32) என்ற நூலில் பவழ பற்பம் (பக். 4). பஞ்சமுகப்பிர்மாஸ்த்திரம் (பக். 5) போன்றவற்றின் செய்முறைகள் புதிய முறைகளாகவும், வீரக்கட்டு (பக். 9) செய்முறை வித்தியாசமானதாகவும். நேர்வாளச் சுத்தி (பக்.5). படிகாரத் திராவகம் (பக்.5). புருஷரத்தினத் தயிலம் (பக். 8) போன்றவற்றின் செய்முறைகள் சிறப்பானதாகவும் அமைகின்றன.

நோயும் மருந்தும் 5:33) என்ற பெருநூலின் நோய். நோய்க்குரிய மருந்து. மந்திரம், வசியம் முதலான கூறப்படுவதுடன் நன்னாரி. இஞ்சி, மாதுளம்பழம், சந்தனம் முதலான சர்பத் வகைகளும். சோப் தயாரிக்கும் முறையும், கருப்பு பூட்ஸ்பாலிஸ். வாசனைக் கருப்புச் சாந்து. இங்க் பவுடர் முதலியவற்றின் செய்முறைகள் இடம்பெற்றிருப்பது சிறப்பான பகுதியாக அமைகிறது. இந்நூலில் மருத்துவக் குறிப்பு முடியுமிடங்களில் ஆமென் என்ற சொல்லாட்சி இடம்பெறுவதால் இசுலாமியர் படியெடுத்த சுவடியாக இருக்கலாம்.

மருத்துவக் குறிப்புகள் (5 : 34) என்ற பெருநூலில் உரைநடைப் பகுதிகளுக்கிடையே 'இராமதேவர் சூத்திரம் பத்து' என்ற தனிநூல் இடம்பெற்றுள்ளது. மேற்சொன்ன திரட்டுகள் வேறு பல நூல்களிலிருந்து உருவானவை என்பதை இது மெய்ப்பிக்கின்றது.

இந்த இராமதேவர் சூத்திரம் பத்து என்ற நூல் அகத்தியர் சூத்திரம் பத்து (799 : 404) என்ற பெயரில் நிறுவன ஓலைச்சுவடியாக உள்ளது. இந்நூல் தட்சிணாமூர்த்தி சூத்திரம் பத்து என்ற பெயரிலும் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த ஒரே நூல் மூன்று ஆசிரியர்களின் பெயர்களில் பல சுவடி நூலகங்களில் காணப்படுகின்றது.

அகத்தியர் பெயரில் அமைந்த நூல்களில் தட்சிணாமூர்த்தி பெயரும். தட்சிணாமூர்த்தி பெயரில் அமைந்த நூல்களில் அகத்தியர் பெயரும் காணப்படுகின்றன.

காட்டு: 1. அகத்தியர் முப்பு (2.529: 863)

தெட்சிணாமூர்த்தி அருளிச்செய்த முப்பு அன்பது முற்றும் (நூல் இறுதி)

2. தட்சிணாமூர்த்தி வகாரம் 16 (த. 803-2)

பேணவே பதினாறு மிதுவே யாகும்

பலமாகும் அகத்தியர்வாக் கியந்தான் முற்றே (இறுதிப் பாடல். 16)

காகிதச்சுவடி ஆய்வுகள்

269