உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வானும் புவியும் மதியுங் கதிரொளியும் என்ற 2ஆவது காப்பே இந்நூலின் முதற் காப்பாய் வருகிறது. இதுபோல் ஒரே பாடல் பல நூல்களில் காப்பாய் அமைவதையும் பார்க்க முடிகிறது. எனவே இந்நூலின் 2ஆம் பாடல் ஒன்று என்ற எண்ணையே பெறுதல் வேண்டும். ஏனெனில் இதுவே நூலின் முதற்பாடலாகும். காப்புப் பாடல்கள் தொடரெண் பெறுவதால் வயிராக்கிய சதகம் 100 பாடல்களில் அமையாமல் 104 பாடல்களில் அமைகிறது நூல் எண் ஒன்று எனத் தொடங்காத இந்நிலையை மிகுதியான சுவடிகளில் காணமுடிகிறது இருப்பினும் காப்புப் பாடல் எண்ணின்றி அமைதலும் (1. 3). எண் பெறினும நூல் எண் ஒன்று என்றே அமைதலும் 1283:505) பல சுவடிகளில் காணப்படவே செய்கின்றது.

பதார்த்த குணசிந்தாமணி

601 பாடல்களையுடைய பதார்த்த குணசிந்தாமணி (4 : 31) என்ற நூலும், 91 பாடல்களையுடைய சரக்கு சிந்தாமணி என்ற நூலும் மருந்துச் சரக்குகளின் மருத்துவக் குணங்களைக் கூறுகின்றன. மேலும் முதல் நூலில் இறைச்சி, மலர். காய்கறி. கிழங்கு. கீரை, உலோகம். நவரத்னம் முதலான சரக்குகளின் குணங்களும், குறிப்பிட்ட சில மருந்துகள் பல நோய்களைக் குணப்படுத்தும் என்பதும், மருந்து உட்கொள்ளும்போது ஒதுக்க வேண்டிய உணவு வகை. நோயின் குறிகுணம். நோயறிந்து மருந்து உட்கொள்ளும் வகை முதலியனவும். இரண்டாம் நூலில் தாம்பிரப்பற்பம். தங்கப்பற்பம் முதலானவற்றின் செய்முறைகளும் கூறப்பெறுகின்றன.

இவ்விரு நூல்களையும் பதார்த்த குண சிந்தாமணி என்ற பெயரில் வெளிவந்த சில அச்சு நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த அளவில் அவற்றிலுள்ள பெரும்பான்மையான பாடல்கள் அச்சுநூல்களினின்றும் வேறுபட்டனவாகத் தெரிகின்றன பதார்த்த குணசிந்தாமணி என்ற பெயரில் நிறுவனத்தில் சில ஓலைச்சுவடிகளும் உள்ளன எனவே இப்பொருண்மையிலுள்ள சுவடிகள் அனைத்தையும். அப்பொருண்மை தொடர்பான அச்சு நூல்களுடன் ஒப்பிட்டு அச்சிடுதல் ஆய்வுலகிற்கு நலம் பயக்கும்.

எனவே வெளிவந்த நூலின் பெயரைப் பெற்றுள்ள பிற சுவடிகளிலுள்ள பாடல்கள் இடம்பெறாத நூற்றுக்கணக்கான புதிய பாடல்கள் அவற்றுள் இருக்கலாம். எனவே இதுபோன்றவற்றைக் கருத்தில் கொண்டு பதிப்பிக்க முற்படின் வந்தவை மீண்டும் அச்சில் வருவது தவிர்க்கப்படுவதோடு. அச்சில் வெளிவந்த நூல் தொடர்பான இதுவரை கிட்டாத கூடுதல் செய்திகளும், புதிய செய்திகளும் கிட்ட வாய்ப்பு ஏற்படும். உரைநடை நூல்கள்

முழுமையாக வேறாக இருக்கலாம். அல்லது அச்சுவடிகளிலுள்ள

சில நோய்களும் சில மருந்துகளும். குஷ்டநோயும் மருந்தும், சுகாதாரக் களஞ்சியம். நோயும் மருந்தும். மருத்துவக் குறிப்புகள், மருத்துவத் திரட்டு போன்ற நூல்கள் பெரும்பாலும் உரைநடையில் அமைந்த பல மருத்துவக் குறிப்புகளைத் தன்னகத்தே கொண்ட பெரும் திரட்டுகளாக விளங்குகின்றன. மேலும் பல சித்த மருத்துவ நூல்களினின்று எடுக்கப்பட்ட பல்வேறு மருந்துகளின் செய்முறைகள் பற்றிய குறிப்புகளின் பயன்பாடு கருதிய தொகுப்புகளாக அமைகின்றன. பல்வேறு காகிதச்சுவடி ஆய்வுகள்

268