உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அச்சு நூலினின்று சற்று வேறுபடுகின்றது. இந்நூல்பற்றி நா. வானமாமலை, "ஐவர் ராசாக்கள் கதைக்குக் கிடைக்கும் பெரும்பாலான சுவடிகளில் இதுபோன்ற தனிக்கதை இல்லையாதலால் ஐவர் ராசாக்கள் கதையில் வரும் ஒரு நிகழ்ச்சி தனிக்கதையாகப் பாடப்பெற்றுவிட்டது" என்று கூறுவர்.

தடிவீரன் கதை. வன்னிராயன் கதை என்ற இரண்டும் ஒரு நூலாகவும் (1996). சின்னணஞ்சான் கதையில் வரும் சுடலமுத்து வீரன் கதை துணைக்கதையாகவும் இடம்பெற்று அவை ஒரு நூலாகவும் (1998) நிறுவன வெளியீடுகளாக வந்துள்ளன. முதல் நூல் தமிழக அரசின் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளது. சின்னணஞ்சானின் மற்றொரு பிரதியான நிறுவன ஓலைச்சுவடி ஓரளவு சிதைந்த நிலையிலுள்ள குறையான நூலாகும். நூல் வெளியீட்டில் இரு மூலங்களும் இடம்பெற்றுள்ளன

அயோத்தி கதை. சோமவார நாடகம். நம்பிராயன் கதை ஆகியன வெளிவர வேண்டிய நூல்கள். நம்பிராயன் கதை சுவடிப்பட்டய ஆய்வேடாக (1998) அளிக்கப் பெற்றுள்ளது. நம்பிராயன் கதை. தபுவீரன் கதை போன்றவை மலையாள நாட்டைச் சார்ந்த கதைகளாக இருப்பதால் மந்திரச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பெற்றிருக்கிறது.

மருத்துவம்

மருத்துவத்திலுள்ள வர்மம் தொடர்பான ஏழு நூல்களில் குறிகுணம். நோய். மருந்துசெய்முறை, உடம்பில் வர்மமுள்ள இடம். மருத்துவம் செய்முறை. வர்மப் பரிகாரம் போன்றன கூறப்பெறுகின்றன. பீரங்கி 100. ஒடிவுமுறிவு சாரி ஆகிய அச்சானவை. பீரங்கித் திறவுகோல் 16. வர்ம வைத்தியம். வாத வைத்தியம் காலம். உடல்குறி அறிதல், கம்பு சூத்திரம் ஆகியன அச்சாகாதவை. கம்பு சூத்திரத்தில் சிலம்பத்திலுள்ள 18 அடவுகள். ஆசானாகத் தகுதிகள். மிருகங்களுடன் சிலம்பப் போர் புரியும் முறைகள். சிலம்பத்தில் உயர்ந்த போர் முறையான வர்ம அடிகள் ஆகியன உள்ளன. கம்பின் பயன்பாடு பற்றி இந்நூல் கூறுவது சிந்தித்தற்குரியது.

"முன்னை அதட்டும் கனி உதிர்க்கும் கவுநாய காக்கும ஆழ மளக்கும்

கையில் கம்பிருந்தக்கால்"

இச்சிறிய நூல் வெளிவரின் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சிலம்பம்பற்றிய சில அரிய உண்மைகள் தெரியவரும்.

மேலும் குருமுகம். வயிராக்கிய சதகம், பரிமூப்புச் சூத்திரம் 16. சூத்திரம் 16. பஞ்சரத்தினத் திருப்புகழ் ஆகியனவும் அச்சாகவேண்டிய நூல்களே. இறுதி மூன்றும் மூப்புப்பற்றிய நூல்கள். கந்தனுடைய நூலருமை என்ற நூலில் (2 : 23) யோகமுப்பு. இரசவாதம் பற்றி 5 பாடல்களும். ஞானவழி நின்று மருத்துவம் செய்ய வேண்டுமென்பது பற்றி 2 பாடல்களும் உள்ளன.

அகத்தியர் முப்பு 30இல் (11 : 40) காப்புடன் 31 பாடல்கள், அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள அகத்தியர் முப்பு 50 எனும் சுவடி நூலில் வரும் 1 காகிதச்சுவடி ஆய்வுகள்

267