உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்ற அடியும் காட்டுகின்றன.

நேரிசை வெண்பா. கட்டளைக் கலித்துறை, கொச்சகக் கலிப்பா. குறளடி வஞ்சிப்பா போன்ற யாப்பு வடிவங்களும், ஒன்பான் சுவையுமிக்க இரண்டாம் நூலில் அன்னையின் அருளிச்செயலும், கருணை உள்ளமும், சின்முத்திரை வடிவும் பொருண்மையாகிச் சிற்றின்பத்தினும் பேரின்பமே சிறந்தது என்பதும். யாக்கை நிலையாமை என்பதும் உணர்த்தப் பெறுகிறது.

மூன்றாம் நூலில் ஊஞ்சல் கட்டுவதற்கான அடிப்படைச் செய்திகளில் ஆடிப் பொன்னூஞ்சல் பற்றியுள்ள செய்திகள் பொருளால் பழமையெனினும், சொல் நயத்தால் புதுமைப் பொலிவு பெறுகிறது.

கவின் சொல்லும், கவிதையழகும், வித்தகப் பொலிவும். பழந்தமிழ்க் கருத்தும். இறைவன் இறைவியின் ஒல்காப் புகழும் பரவியுள்ள இந்நூற்கள் வெளிவரின் தமிழுக்கு ஏற்றம் தரும் வரவுகளாக அமையும்.

புராணம்

குலால புராணத்தில் பாயிரம் தொடங்கி மங்கள வாழ்த்து முடிய உள்ள பகுதியில் குலால புராண சரித்திரம். புராண வரலாறு, பதினெண் கணங்களுதித்த வகை, சுவாயம்புவ மனுவம்ச வரலாறு இடம்பெற்றுக் குலாலர் இனத்திற்குப் பெருமை சேர்க்கிறது. இந்நூல் வெளிவரவேண்டிய சிறந்த நூலாகும்.

னவை

திருஏரகப் புராணம் அச்சான நூல். இப்புராணத்தில் இறைவன், இறையடியார் பற்றி ஆறு துதிப்பாடல்களும் சாரணியச் சருக்கம் முதல் தீர்த்தச் சருக்கம் வரை 11 சருக்கங்களும் உள்ளன.

நாட்டுப்புறவியல்

இப்பொருண்மையில் வரும் 11 நூல்களில் தொன்மக்கூறுடைய கதைப் பாடல்களே மிகுதி. சாதியப் பிரச்சினை, சமயப்பூசல், மதத்துக்கிடையே நிகழும் சமூகப்புரை போன்றவை சமுதாயப் பார்வையில் சீர்கேடுடையன என்றாலும் இந்நூல்கள் இவற்றை எப்படிப் படம் பிடித்துக் காட்டுகின்றன என்று ஆய்ந்தறிவதற்கு நல்ல தரவுகளாகின்றன.

அரவமுத்து, வன்னிராயன். சின்னணஞ்சான் போன்ற கதைத் தலைவர்கள் கண்ட அவலங்கள் மக்கள் திருந்துவதற்குப் பாடங்களாகின்றன.

அயோத்தி கதை, வைகுண்ட அம்மானை. சோமவார நாடகம் ஆகியன பக்திக்கு வித்திடும் பனுவல்கள். இவை அக்காலத்து மக்களின் மனநிலையை, சங்கத் தமிழர்களைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் இறவாத் தன்மை பெற்றவை.

வைகுண்ட அம்மானை, கட்டபொம்மு கும்மி. குருக்களாஞ்சி கதை, இடைச்சி செல்லி கதை ஆகியவை அச்சானவை குருக்களாஞ்சி கதை ஆசியவியல் நிறுவனத்தின்வழி The Wandering Voice என்ற நூலில் வெளிவந்துள்ளது. இந்நூலிலுள்ள மூன்று கதைகளுள் இதுவுமொன்று. இடைச்சி கதையின் இறுதிப்பகுதி

266

காகிதச்சுவடி ஆய்வுகள்