உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இவைதவிர முற்குறிப்புவழி சாதன நாதாந்தமாலை (1 15) என்ற நூலும் பிற்குறிப்புவழிச் சுகாதாரக் களஞ்சியம் (5 32) என்ற நூலும் அச்சில் வெளிவந்த நூல்களைப் பார்த்து எழுதப் பெற்றவை என்று தெரியவருகிறது.

முற்குறிப்பு

ஆசிரியர் பெயர். அச்சுக்கூடம், அச்சிட்டவர். பதிப்பாண்டு (1769). நூல் கிடைக்குமிடம், விலை, அச்சுநூலைப் பெயர்த்து எழுதிய நூலின் ஆண்டு (1897), இதைப் பார்த்து எழுதி உருவான நூலின் ஆண்டு (1911). நூலைப் பயன்படுத்தியவர் யாரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற குறிப்பு. மறுபதிப்பு ஆசிரியர் அனுமதியின்றி கூடாது என்ற விளம்பரம் (பக். 77-79) மிக விளக்கமாகச் சுவைபடக் கூறப்பெற்றுள்ளன. இக்குறிப்பின் வழி 1911ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூலைப் பார்த்து எழுதப்பட்டது இந்நிறுவனக் காகிதச்சுவடி என்பதும் தெரிகிறது.

பிற்குறிப்பு

காண்டம்.

...

...

'சுகாதாரக் களஞ்சியம் முதற்காண்டம், இரண்டாம் காண்டம். மூன்றாம் கந்தசாமி நாயக்கர் இயற்றிய இரங்கோன் பர்மா யெக்கோ பிரஸில் பதிப்பிக்கப்பட்டது. 1906. சிவசமயம். இந்நூலின் நூற்பெயரை அறிய இப்பிற்குறிப்பே துணைபுரிந்தது.

பொருண்மை

சிற்றிலக்கியம் 4. இலக்கணம் 1. புராணம் 2. நாட்டுப்புற இலக்கியம் 11. மருத்துவம் 24. மந்திரம் 2. ஞானம் 11. நுண்கலைகளான அங்கவியல், மனைசாத்திரம். ஆரூடம் ஆகியவை 3 என்ற பொருண்மைகளைக் கொண்டனவாக இந்நூல்கள் அமைகின்றன.

சிற்றிலக்கியம்

சிவகிரி குமரசதகம் என்ற 1-48 பாடல்களையுடைய நூல் குறையானது. இதுபோன்ற நூல் ஓலைச்சுவடியில் (274. 496) 1-102 பாடல்களில் முழுமையாக இடம்பெற்று, 1984இல் இந்நிறுவனச் சுவடிப்பட்டய ஆய்வேடாக அளிக்கப்பெற்று. 1995இல் நூலாக வந்துள்ளது. வைரபுரம் நகரில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரர் உடனாய திரிபுரசுந்தரி அம்பிகை மேல் அமையப்பெற்ற ஒருபா ஒருபஃது, நவமணிமாலை, திருவூசல் ஆகியன பிற மூன்று நூல்களாம்.

நாடகத்தின் தொடக்கம் போல். இம் முதல் நூலின் தொடக்கம் அமைவதை.

  • தாதவிழ் தண்மலர்ப் பொழில்எனும் அரங்கில்

மாதர் வண்டினம் நல்லியாழ செய்ய

1

மயிலெனும் பொதுமகள் நல்லியாழ் செய்ய" (பா. 1)

ஒரே பொருளுக்குப் பயன்படும் உவமை ஒருசொற் பன்மொழியாக

அமைவதை,

ஒண்சடை மதியமும் தண்ணிலவு எறிக்க" (பா.4)

காகிதச்சுவடி ஆய்வுகள்

265