உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




த.பூமிநாகநாதன் ஆராய்ச்சி உதவியாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

சென்னை

தாள் சுவடிகளில் மருத்துவம்

தமிழகத்தில் சுவடிப் பாதுகாப்பில் பெருமையோடு பேசப்படும் நூலகங்களில் தலையாயதாக விளங்குவது அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகமாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண ஆளுநராக வந்த காலின் மெக்கன்சி (கி. பி. 1754 - 1821). டாக்டர் லெய்டன் (கி. பி. 1803 - 1811). சி. பி. பிரௌன் (கி. பி. 1798 - 1827) ஆகிய மூவரும் தங்கள் முயற்சியால் திரட்டிய சுவடிகளைக் கொண்டு கி.பி. 1869இல் ஒரு நூலகமாகத் தொடங்கினர். அது கி. பி. 1876இல் மாநிலக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. பின்னர். அதே ஆண்டில் இன்றைய சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திற்கு மாற்றப்பட்டு. தனி நூலகமாகவே இயங்கி வருகிறது. பன்மொழிச் சுவடிகள் சுமார் அறுபத்தையாயிரம் மற்றும் பன்மொழி தாள்சுவடிகள் சுமார் இருபத்தைந்தாயிரம் எண்ணிக்கை கொண்டதாகவும் விளங்குகிறது இந்நூலகம். இதில் தமிழ்ச்சுவடிகள் சுமார் பதினேழாயிரமும் அம்மொழி சார்ந்த தாள்சுவடிகள் சுமார் ஐயாயிரத்திற்கு மேலும் இருப்பதாக அந்நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை மூலமாக அறியமுடிகின்றது.

ஈண்டு இந்நூலகத்தின்கண் காணும் தாள் சுவடிகளில் பதிவாகியுள்ள மருத்துவச் சுவடிகளை (நூல்களை) வகை தொகை செய்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வகையும் தொகையும்

தாள்சுவடிகளில் பொதிந்துள்ள மருத்துவம் சார்ந்த ஏடுகளைக் கணக்கிட்டால் முன்னூறுக்கும் மேற்பட்ட மருத்துவம் தொடர்பான நூல்கள் கிடைக்கின்றன. மருத்துவம் என்ற சொல் மானுட மருத்துவத்திற்கும் விலங்கின மருத்துவத்திற்கும் பொதுவாக அமையும் பெயர் எனலாம். இதனையே அக்காலத்தில் வாகடம் என்ற சொல்லால் அழைப்பர். குழந்தை வாகடம் என்ற சொல் மருத்துவத்தில் பழகிவரும் சொல்லாகும். மாட்டுவாகடம். அசுவ அல்லது குதிரை வாகடம், யானை வாகடம் போன்ற பிரிவுகள் விலங்கின மருத்துவத்தை விளக்குவனவாக அமைகின்றன.

இத்தகைய வாகடம் அல்லது மருத்துவம் என்பது சித்தர்கள் சொன்ன காகிதச்சுவடி ஆய்வுகள்

279