உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருத்துவமாகவும். அனுபவ மருத்துவம் என்ற பெயரில் பல்வேறு மருத்துவர்கள் தந்த செய்திகளாகவும் வைத்தியம் என்ற பெயரில் பலதரப்பட்ட மருத்துவ. மருந்து செய்யும் முறைகளை உள்ளடக்கிய செய்திகளாகவும் என மூன்று நிலைகளில் இத்தாள் சுவடிகள் காணப்பெறுகின்றன.

சித்தர்கள் சொன்ன நூல்கள்

தமிழகத்தில் பொதுவாகச் சித்தர்களாலேயே மருத்துவம் ஓங்கி வளர்ந்ததென்ற நம்பிக்கை உண்டு தமிழில் சித்தர்கள் எத்தனைபேர் என்பதில் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் பதினெண்பேர் என்ற வழக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்றது இப்பதினெட்டுச் சித்தர்கள் நிரல்படுத்திக் காட்டும்போது ஆய்வாளருக்கு ஆய்வாளர் வேறுபடுவதும் உண்டு எது எவ்வாறாயினும் அகத்தியர். உரோமரிஷி. காகபுசுண்டர். இராமதேவர். கொங்கணர், சுத்தானந்தர். திருமூலர், தேரையர். நந்திதேவர், பிரமமுனி, மச்சமுனி, வான்மீகர் போன்ற பெயர்கள் மருத்துவச் சித்தர்களாகப் பன்னெடுங்காலமாக வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் சித்தர்களின் பெயர்களாகும்.

இச்சித்தர்கள் மருத்துவத் துறையில் பல்வேறு நிலைகளில் தங்கள் ஆய்வுகளை நடாத்தித் தாங்கள் கண்டறிந்த நுணுக்கமான கருத்துக்களை மரபுவழிச் செய்யுள் வடிவில் பாடல்களாகத் தந்துள்ளனர். இவர்களுடைய நூல்களில் பெரும்பாலான நூல்கள் இன்று தனியார்களாலும், பல்வேறு நிறுவனங்களாலும் அச்சுப் புத்தகங்களாக வந்துள்ளன. வெளியில் வராத நூல்களும் ஓலைச்சுவடிகளாகவும் தாள் சுவடிகளாகவும் இலங்குகின்றன. இந்நூலகத்தைப் பொறுத்தவரை ஓலைச் சுவடியிலிருந்து பிரதி செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகளே பெரும்பாலும் தாள் சுவடிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய தாள் சுவடிகளில் அகத்தியர். இராமதேவர். உரோமரிஷி. கொங்கணர், கௌசிகமுனி, சிவவாக்கியர், சுத்தானந்தர், சுப்பிரமணியர். சூதமுனி, தட்சணாமூர்த்தி, தன்வந்திரி, திருமூலர், தேரையர், நந்திதேவர். பிரமமுனி. புலத்தியர். புலிப்பாணி. போகர், மச்சமுனி, வான்மீகர் போன்றோர் பெயர்களில் நூல்கள் காணப்படுகின்றன

அகத்தியர்

இவருடைய பெயரில் சௌமிய சாகரம். இரத்தினச் சுருக்கம். குரு நூல் வைத்தியம் 600, சரக்கு, தண்டகம், தீட்சை நாடி சூத்திரம், நட்சத்திர காண்டம், நாடி வைத்தியக் குறிப்பு. நிகண்டு 800, நோயின் சாரம், பச்சிணி 131. பதார்த்தகுண சிந்தாமணி. கருக்குரு 1000, உதரக்கிரியை வைத்தியம், பிள்ளைப்பிணி வாகடம், பற்பவகை, விஷபேதி வைத்தியம். வைத்திய செந்தூரம் முன்னூறு. பரிபூரணம் 1200. வைத்தியம் 1500 போன்ற பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நூல்கள் காணப்பெறுகின்றன. இவற்றில் சௌமிய சாகரம். இந்திரசாலம் 1200, சகல கலைக்கியானம். பரிபூரணம் 1200. வைத்திய செந்தூரம் 300, வைத்தியம் 1500 போன்ற நூல்கள் அச்சு நூல்களாக வெளிவந்துள்ளன.

280

அகத்தியர் சூத்திரம் 8. தந்திரம் 200, தந்திரம் 12. திரட்டு 80, பட்சிணி 131, காகிதச்சுவடி ஆய்வுகள்