உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அனுபோக சூத்திரம். அனுபவ வைத்தியம் முதலான பல்வேறு நூல்கள் இன்று வரை பதிப்பாகவில்லை.

இராமதேவர்

இவரது பெயரில் இராமதேவர் ஆயிரம், இராமதேவர் முப்பு விவரம். இராமதேவர் வைத்தியம் 80. இராமதேவர் பட்சிணி. யாகோபு என்ற இராமதேவர் வைத்தியம் முதலான நூல்கள் உள்ளன.

கொங்கணர்

இவருடைய நூல்களாகக் கொங்கணர் கற்பம். கொங்கணர் கடைக்காண்டம். கொங்கணர் வாகடம். கொங்கணர் முதற்காண்ட உரை. கொங்கணர் வைத்தியம் ஆகிய நூல்கள் தாள்சுவடிகளாக உள்ளன.

சட்டைமுனி

இவரது பெயரில் உப்புக்கட்டு 100. சரக்கின் பெயர், குணவாகடம். தாதுநிதானம். சட்டைமுனி சாத்திரம். சகல வைத்தியம். சட்டைமுனி ஆயிரம். கற்பம். நிகண்டு ஆகிய நூல்கள் பதிவாகியுள்ளன.

தன்வந்திரி

இவரது நூல்களாகக் கருக்கிடை 200. கலைஞானம் 200. தன்வந்திரி சத ஸ்லோகம், தன்வந்திரி சிந்தாமணி, தன்வந்திரி சிமிட்டு, இரத்தினச் சுருக்கம். தன்வந்திரி சூத்திரம் தண்டகம், நாடி சாத்திரம். நிகண்டு. முப்பு 500. வாகடசுரநூல்.வாதம் 50. தன்வந்திரி வாதம், அறுவகைக்குணம், வாலை சாத்திரம். வைத்தியம் காவியம் 1000. வைத்திய சாத்திரம். வைத்தியம் 70. தாதுபுஷ்டிக் குளிகை ஆகியன தாள்சுவடிகளாக

உள்ளன.

திருமூலர்

கருஉற்பத்தி, திருமூலர் சூத்திரத்திரட்டு. சூத்திரம் 508. நாடி சூத்திரம். வாகடம். வாத திரவியம் 200. வாத சூத்திரம் 3000. வைத்தியம் 600, வைத்திய முறை வசனம் ஆகியவை இவர் பெயரில் அமைந்தவை.

நந்தீசர்

சதுர வாகடம் பகுதி ஒன்று மற்றும் இரண்டு வாதசூத்திரம், வாதகாண்டம். திருமந்திரம். நந்தி நூல். நந்தீசர் திறவுதாழ். சூத்திரம், நந்தீசர் கடைக்கற்பம். நந்தீசர் சாத்திரம், நாடி நிதானம், நயனவிதி, நாடிநூல் ஆகியன இவர் பெயரில் அமையும். தேரையர்

தேரையர் வைத்தியம் 1000. கசாயத் திரட்டு. தைல வர்க்கச் சுருக்கம். நோயின் சாரம். தேரையர் பாடல், வைத்தியத் திரட்டு 48 முதலான நூல்கள் இவரது பெயரில் காகிதச்சுவடி ஆய்வுகள்

281