உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாள்சுவடிகளாகக் காணப்படுகின்றன. .

பிரமமுனி

கருக்கிடைச் சூத்திரம் 380. கருக்கிடை நிகண்டு. பிரமமுனி சூத்திரம் 360. பிணி வாகடம். பால சிகிச்சை, பிரமமுனி நாடி. பிரமமுனி வைத்தியம் ஆகிய நூல்கள் இவரது பெயரில் உள்ளன.

பிள்ளை

புலிப்பாணி

புலிப்பாணியார் பாடல். புலிப்பாணி வைத்தியம் 500. பெண்கள் குழந்தைகள் வைத்தியம். புலிப்பாணித் திரட்டு, பெருநாடி, புலிப்பாணி பலதிரட்டு முதலிய நூல்கள் இவரது பெயரில் தாள்சுவடிகளாக அமைந்துள்ளன.

போகர்

போகர் சாகரம். நவரத்தின வைப்புச் சூத்திரம், போகர் நிகண்டு. பச்சிலை மூலிகை வைத்தியம், பூரணக் குளிகை போகர். ஜனன சாகரம், போகர் 700 ஆகியன இவரது பெயரில் காணப்படுகின்றன.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி சாலம் ஆறுகாண்டம். நட்டாமுட்டி சூத்திரம். தட்சிணாமூர்த்தி பாடல் பின் 80, வாகடம், வைத்தியம், கடைக்காண்டம் 600. வைத்திய வல்லாதி. தட்சிணாமூர்த்தி சூத்திரம் முதலிய நூல்கள் இவர் பெயரில் அமைகின்றன. வான்மீகர்

வான்மீகர் அடிதலை கயிற்றுச் சூத்திரம். கற்பச் சூத்திரம். நாடி சூத்திரம். மணிக்கடை கயிற்றுச் சூத்திரம், வாத நாடி சூத்திரம், பலவிரல் சூத்திரம் போன்ற நூல்கள் இவரது பெயரில் தாள்சுவடிகளாக அமைந்துள்ளன.

இவையன்றிச் சுந்தரானந்தர் அதிசயம். சுந்தாரனந்தர் கூட்டின சாத்திரம். சுந்தாரனந்தர் கேசரி வித்தை ஆகிய நூல்கள் சுந்தரானந்தர் பெயரிலும். புலத்தியர் நாடி சூத்திரம், (இ)டமரானந்தர் சூத்திரம். இடைக்காட்டுச் சித்தர் பாடல். கமலமுனி சுருக்கம், கயிலாசமூர்த்தி வாதநூல், சிவ வாக்கியர் நாடி சூத்திரம், சூதமுனி சூத்திரம். கருவூரார் கருக்கிடை. கருவூரார் பலதிரட்டுச் சூத்திரம், கருவூரார் நொண்டி போன்ற நூல்கள் அந்தந்தச் சித்தர் பெயரிலேயே வழங்கப்படுவதைக் காணலாம்.

இதுவரை பார்த்தவகையில் மேற்சொன்ன சித்தர்களாக விளங்கும் பெயரியோர்களின் பெயரில் அமைந்த பல்வேறு வகையான மருத்துவ நூல்களில் ஓலைச் சுவடியை மூலமாகக் கொண்டு வெளிவந்த நூல்களே அதிகம். தாள் சுவடியைக் கொண்டு வெளிவந்த நூல்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவையே. பொதுவாக, பதிப்பு நிறுவனங்கள் - இரத்தின நாயகர் சன்ஸ், சண்முகானந்தர் டிப்போ. தாமரை நூலகம் போன்ற பதிப்பகங்கள் சுவடியைக் கொண்டே பதிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன. ஆனால், ஆய்வு நிறுவனங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். ஆசியவியல் நிறுவனம். சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம். காகிதச்சுவடி ஆய்வுகள்

282