உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆவணங்களைப்பற்றி பெர்னார்டு என்பவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த கவுன்சிலின் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவதாவது : நாட்டின் நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஆவணங்கள் எனக்கு உதவின. இவ் ஆவணங்கள் நிலப் பிரிவு. நிலப் பயன்பாடு. மொத்தக் குடியிருப்பு. மக்களின் உடைமை, சிறப்புரிமைகள், கால்நடைகள்பற்றிய வருவாய்க் கணக்குகள் ஆகும். ஒவ்வொரு கிராமத்தின் மொத்த மகசூலும் தோஸ்த் அலி காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட தீர்வை விழுக்காட்டின்படிப் பிரிக்கப்பட்டதைப் பற்றிக் கூறுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். நிலங்களின் தரத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக நிலங்கள் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தரம் பிரிக்கப்பட்ட நில அளவை ஆவணங்களைப்பற்றிக் கூறும் ஏட்டிற்குத் 'தரப்படி வகை ஏடு என்று ஏடு' பெயர். ஒவ்வொரு கிராமத்தைப்பற்றிய செய்திகளும் தரப்படி வகை ஏட்டுடன் தொடங்குகிறது. நிலங்களை 24 அடி கொண்ட கோலால் 100 குழி கொண்டது ஒரு காணி என அளந்துள்ளனர். இந்த ஆய்வானது செங்கற்பட்டு மாவட்டத்தில் நில அளவை எவ்வாறு நடைபெற்றது என்பதைப் 'புதுப்பாக்கம்' என்ற ஊரை முன்மாதிரியாகக் கொண்டு விளக்க முற்படுகிறது.

புதுப்பாக்கம்

புதுப்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவளம் சீமையில் தையூர் மாகாணத்தில் அமைந்துள்ளது. 1762ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆந்தேதி நந்தன வருடம் புரட்டாசி மாதம் 18ஆந்தேதி இஞ்சிநீர் பாரநிட்டு ராசஸ்ரீ செங்கல்வராய முதலியார் அவர்கள் திட்டப்படிக்கு தரப்படி வகையேடு 24 அடிக்கோலால் குழி 100க்குக் காணி 1 ஆக நஞ்சை காணி 281 புஞ்சை காணி 799க்கு ஆக 1080 காணி நிலத்தில் புதுப்பாக்கம் அமைந்துள்ளது. நிலங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை : 1. புறம்போக்கு நிலம் 2. மானிய நிலம் 3. வாரப்பற்று நிலம் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே நில அளவு

நடத்தப்பட்டுள்ளது:

புறம்போக்கு நிலங்கள்

கோயில், குளம், குட்டை, தாங்கல், ஏரி. மலை, மடு களத்து மேடு. மந்தை வெளி சாவடிமேடு. கிராம நத்தம். சேரி நத்தம், ருத்ரபூமி இவைகளை உள்ளடக்கி இருப்பதே புறம்போக்கு நிலப்பகுதியாகும். இந்நிலப் பகுதிகள் அமைந்துள்ள இடங்களைத் தெரு திசை விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலத்தில் முதலில் குறிப்பிடப்படுவது ஊரின் நடுவில் அமைந்துள்ள கோயில்கள் ஆகும்.

1.

2.

1234

நடுத்தெரு புழுதி விநாயகர் கோயில்

நடுத்தெரு பெருமாள் கோயில்

3.

வடக்கு அகத்தீசுவரன் கோயில்

4.

வடக்கு அம்மை கோயில்

5.

வடமேற்கு பிடாரி அலங்காரி கோயில்

காகிதச்சுவடி ஆய்வுகள்

எண்

குழி

10

1

30

1

160

20

60

291