உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




த.கலா ஆய்வாளர்

ஓலைச்சுவடித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

செங்கற்பட்டு ஆவணங்கள் நில அளவு

நாடு நல்லநிலையில் இருக்கவேண்டுமாயின் அந்த நாட்டின் சுற்றுச் சூழல் நில அமைப்பு நிர்வாகத்திறமை தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இந்த அடிப்படைகளை வைத்தே ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணிக்கமுடியும். ஒரு மனிதன் உண்ணும் உணவு உடுக்கும் உடை பயன்படுத்தும் பொருள் அனைத்தையும் அவனுக்குக் கொடுப்பது நிலமே. அதனால் நிலங்களைத் தரம் பிரிப்பதும் பராமரிப்பதும் தேவையான ஒன்றாகும். இதனைக் கி பி. 17. 18ஆம் நூற்றாண்டுகளில் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் முறையாக அளந்துள்ளதை ஆவணங்களின் வழியாக அறியமுடிகிறது.

கி. பி. 1743இல் ஏற்பட்ட கர்நாடகப் போரில் ஆங்கிலேயர்கள் நவாப்பிற்கு உதவி செய்தமையால் செங்கற்பட்டு மாவட்டம் முகமது அலியால் ஆங்கிலேயருக்குக் கொடுக்கப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள இப்பகுதிகள் ஆங்கிலேயருக்குப் போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தமையால் இப்பகுதியைத் தம் முழுமையான ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வருவதற்கு முன்பாக இப்பகுதியின் மதிப்பையும் வருவாயையும் அறியும் பொருட்டு ஆங்கிலேயர்கள் நில அளவை தொடர்பான விரிவான கணக்கெடுப்பு ஒன்றைத் தாமஸ் பெர்னார்டு என்பவர் தலைமையில் மேற்கொண்டனர் பெர்னார்டு கணக்கெடுப்பின் வாயிலாகப் பெறப்பட்ட கணக்கு சென்னை ஆவணக் காப்பகத்தில் Board of Revenue Miscellaneous Series என்னும் பிரிவில் 40 தொகுதிகளும் Chinglepet District Record Series எனும் பிரிவில் 10 தொகுதிகளும் ஆக 50 தொகுதிகள் தாள் சுவடிகளாக உள்ளன இதன் மூல ஆவணங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் ஓலைச் சுருணைகளாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட மூலச் சான்றுகள் செங்கற்பட்டு ஓலை ஆவணங்கள் ஆகும். இக்கணக்கெடுப்பிற்குப் ஓலை ஆவணங்கள்

இம்மாவட்ட ஆவணங்கள் கி.பி. 1760 - 1860 வரையிலான காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஆவணங்கள் வழி கிராமத்தின் அமைப்பு நிலப் ஒவ்வொரு பயன்பாடு நில அளவு சமூகப் பொருளாதார நிலை. நிலத் தீர்வை முதலியவற்றை காகிதச்சுவடி ஆய்வுகள்

290