உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அனுபவ வைத்தியம் (ஆர். 5630) என்ற மற்றொரு நூலில் குட்டத்திற்குச் சூரணம். படர் தாமரைக்குப் பூச்சி மருந்து. நாய்க்கடிக்கு மருந்து. மாலைக் கண்ணுக்கு. மண்டைக் கரப்பானுக்குத் தைலம். பித்தத்துக்குத் தைலம். எலிக்கடிக்கு எண்ணெய். விரை வீக்கத்திற்குப் பத்து போன்ற ஓர் இல்லத்திற்குத் தேவையான பயனுள்ள மருந்துகளும், மருத்துவ வகைகளும் கூறப்பெற்றுள்ளன.

முடிவுரை

மருத்துவம் என்பது அக்காலம் தொட்டு இன்று வரை கல்விசார் மருத்துவம். அனுபவ வைத்தியம் என இரு பெரும் பிரிவுகளில் இருந்தாலும் எழுத்து வகையாகப் பார்க்கும் போது. வைத்திய நூல் என்ற ஒருவகையும் இருப்பதை அறிய முடிந்தது.

நாட்டுப்புற வியலுக்கு இன்று சமுகம் நல்ல வரவேற்புத் தந்து வருகிறது. சித்தர் சொன்ன சித்த மருத்துவமும் பட்டறிவாளர்கள் சொன்ன அனுபவ வைத்தியமும் நாட்டுப்புற மருத்துவக் கலையே எனத் துணிந்து கூறலாம்.

நாட்டுப்புறக் கலைக்கு ரிஷிமூலம் தெரியாது. அனுபவ வைத்தியத்திற்கு மூலாதாரம் இருந்தாலும் இன்று பெரும்பாலும் கிடைக்கப் பெறுவதில்லை. எது எவ்வாறாயினும் அனுபவ வைத்தியம், வைத்தியம், வைத்திய முறை, வைத்தியம் வசனம். வைத்தியம் பலதிரட்டு. வைத்திய நூல். வைத்திய விஷயம் என்ற அமைப்பில் காணும் மருத்துவ நூல்கள். அவை கூறும் மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவச் செய்திகள் போன்றன மக்கள் மன்றத்தைச் சென்றடைந்தால் இன்றைய நாகரிக உலகில் வாழும் இளந்தலைமுறையினர் தம் முன்னோர்களின் மருத்துவத் துறை சார்ந்த நுண்மாண் நுழைபுலத்தைக் கண்டுணர வாய்ப்பாகும்.

அறிவியல் கோட்பாடுகள். தகவல் தொடர்புக் கோட்பாடுகள் என்று உலகம் வளர்ந்து சுருங்கி விட்ட நிலையில் இம் மண்ணின் மருத்துவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது. அதற்கு இதுபோன்ற தாள்சுவடிகள் அச்சுருவாக வெளிக் கொணரப்பட வேண்டும்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

289