உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உடன் மூத்திரம் விடும்.

6. திப்பிலி, ஏலம், கருஞ்சீரகம். நற்சீரகம் இந்நான்கும் சமன் அளவு பொடித்துக் கோவைக் காயைப் பிளந்து உள் விதைகளை எடுத்துவிட்டு, அதில் வைத்து மூடி சீலை சுத்தி. செம்மண் கட்டி அனலில் புடமிட்டுப் பிட்டெடுத்துத்தேன். சக்கரை, எலுமிச்சைச் சாறு. கடுக்காய்ச் சாறு. முலைப்பால். மோர். வேப்பஞ்சார். தும்பைச்சாறு. துத்திச்சாறு இதுவெல்லாம் பாங்கு. இதுகளில் கொடுக்கவும். அந்திரசுரம். தாபசுரம். அக்கினிக்காய்ச்சல், உப்பிசம். பித்துப் பேசுகிறது. குளிர் நடுக்குதல். காமாலை. வயித்துவலி எல்லா வியாதிகளுக்கும் பாங்குடனே கொடுக்கத் தீரும்

அனுபவ வைத்தியம் வசனம் (ஆர். 6348)

இது 54 பக்கங்களைக் கொண்டது. காதில் கீழ் பாய்தலுக்கு மருந்து, உடல் வாதத்திற்கு மருந்து. வயிற்று வியாதிக்கு மருந்து. மண்டை சூலைத் தயிலம் தயாரித்தல். கெர்ப்ப விப்புருதி. கல்லெரிப்பு. வாய்வுக்கு மாத்திரை இப்படிப் பல்வேறு செய்திகளைக் குறித்து வரும் இந்நூலில் இன்று மக்களிடையே பொதுவாகக் காணப்படும் மூலம் என்ற நோய்க்கு ஒரு அருமையான எளிய கைமருந்தை இந்நூல் கூறுகிறது அது பற்றிய செய்தி வருமாறு.

மூலம் என்பதை உள்மூலம். வெளிமூலம் என இரு வகையாகப் பகுத்துக் கூறுவர் மருத்துவர் இன்றைய அலோபதி மருத்துவம் அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை வழியாகவே இதற்கு மருத்துவம் செய்கிறது. பல்வேறு அனுபவ சித்த வைத்தியர்கள் தங்களுக்குத் தெரிந்த முறையில் இம்மருத்துவ முறையை இந்நோய் தீராத

வாணிகமாக்கிச் செய்து வருகின்றனர். இந்நிலையில் வ முறையை

அல்லது தீர்க்க முடியாத நோயாகவே விளங்கி வருகிறது. ஆனால் இந்நூலில் காணும் மருந்து மற்றும் மருத்துவமுறை உணவு மூலமாகவே நோயைத் தீர்வு செய்து அம்மூலமானது தானே விழுந்துவிடும்படியாகச் செய்ய முடியும் எனக் கூறுகிறது. மருந்து விவரம் வருமாறு :

"விடைக் கோழியைக் கொன்று மயிரைப் பறித்துப் போட்டுத் தோலுமுறித்துப் போட்டு குடலும் காலும் தலையும் நீக்கி கடைச்சுக்கு, இந்துப்பு, பெருங்காயம். கடுகு. வெள்ளுள்ளி. மிளகு. சாரணைவேர். நற்சீரகம் இவற்றையெல்லாம் சேர்த்துக் கோழி வயிற்றைப் பிளந்து அதன் உள்ளே வைத்து கோழி வயிற்றிலும் மேலும் பூசி, பச்சையாய் இருக்கும் கள்ளி மரத்தை வெட்டி பத்தலாகத் தோண்டி அதனுள்ளே வைத்துக் கட்டி எருவடக்கி நன்றாய்ச் சுட்டு எடுத்து நிழலில் உலர்த்தி உலர்ந்ததைப் பொடி செய்து வைத்துக் கொண்டு நாள் ஒன்றுக்கு விரற்கடிப் பருமானங் கொள்ளவும் மூலம் விபம் தோதல் மாறும்".

இப்படி அன்றாடம் கிடைக்கும் பொருளைக் கொண்டு கடுமையான உடல் பாதை ஏற்படுத்தும் மூலத்திற்கு மருந்து எத்தனை சொல்லப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

எளிமையாகச்

288

காகிதச்சுவடி ஆய்வுகள்