உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அனுபவ வைத்தியம் என்பதில் பொதுநிலையில் மருத்துவம் பேசப்பட்டதே ஒழிய வைத்தியம் என்ற தலைப்பில் பகுப்பு முறையும் பேசப்பட்டுள்ளது என்பது ஈண்டுக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். வைத்திய அகராதி என்றும். வைத்திய கிரந்தம் என்றும். வைத்தியத் திரட்டு என்றும். வைத்திய நூல் என்றும். வைத்திய குணவாகடம். வைத்திய முறைகள் என்றும் பல்வேறு நிலைகளில் அமைகின்றன. இவையன்றி வைத்தியமும் மந்திரமும் வைத்திய மூலிகை, வைத்திய விசயம். நாடி நிதானம். வைத்திய வசனம். வைத்திய சதகம் போன்ற தனி நூல்களும் காணக்கிடக்கின்றன இவற்றுள் சில நூல்களைப் பற்றி இப்பகுதி விளக்குகிறது.

வைத்திய அகராதி

இந்நூல் 50 பக்கங்களைக் கொண்டு முழுமையானதாக விளங்குகிறது. ஆனால் தொகுத்த ஆசிரியர் பெயர் இன்னதென்று தெரியவில்லை. மருத்துவம் தொடர்பான மூலிகைகள். மருந்துகள், துணை மருந்துகள். நோய்ப் பெயர் விளக்கங்கள், பத்தியங்கள் போன்ற பலதரப்பட்ட செய்திகள் ஈண்டுச் சொல்லப்பட்டுள்ளன. பொதுவாக அகராதி. இலக்கியம் போன்ற செறிவுமிகுந்த செய்திகளுக்கே தயாரிக்கப்படுகிறது. ஈண்டுக் காணப்படும் அகராதி சித்தர்கள் சொன்ன நூல்கள் வடிவான மருத்துவச் செய்திகளுக்கும். உரைநடை வடிவாகச் சொன்ன அனுபவ வைத்தியச் செய்திகளுக்கும் நடைமுறையில் பழகிவரும் மருத்துவம் தொடர்பான வழக்காறுகளுக்கும் பயன்படும்படியாக இவ்வகராதிகள் விளங்குகின்றன. பொதுவாக வைத்திய அகராதி என்ற பெயரில் இந்நூலகத்தில் காணப்படுவது போலப் பிற நிறுவனங்களில் காணக்கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து. கூறியது கூறல் தவிர்த்துப் பெரிய அளவில் அகராதிகளாக வெளிவருமாயின் சித்த மருத்துவத் துறைக்குப் பெரும் பயன் அளிக்கும்.

வைத்தியக் கிரந்தம்

இந்நூல் மல்லே கவுண்டன் பாளையம் வாத்தியார் என்ற மருத்துவரின் மருத்துவ முறைகள் பற்றியும். அவர் பல்வேறு நோய்களுக்கு எந்தெந்த விதமான மருந்துகளைத் தந்தார் என்பதுபற்றி நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரதியாகத் தெரிகின்றது. இதில் காணும் சில மருத்துவ முறைகள் எல்லோர்க்கும் பயன்படும்படியாக அமைந்துள்ளன. சில சிறப்பான செய்திகள் வருமாறு :

1 நிக்காத பேதிக்கு மோரில் எலும்பிச்சம் பழம் பிஞ்சு கொடுக்கவும். 2 ஆறாத புண்ணுக்கு அரிதாரம் போடவும்

3. பனையது கனியைச் சுட்டுப் பொடித்து மோரில் கொடுக்கத் தீராத பேதிகளெல்லாம் தீரும்

4. கடுகு. முள்ளிக்காய் தீ வளர்த்து வெள்ளாட்டுக் கோமியத்தில் 3 நாள் கொடுக்கவும் (1படி கோமியம்) கார்ப்பு. புளிப்பு தவிர்க்கவும்.

5. தென்னை மரத்தினுடைய இளம்வேர். பாக்கு மரத்தினுடைய இளம் வேர். கரும்பனையின் இளம் வேர். எலிப்புழுக்கை. சிறுநெருஞ்சில். வெள்ளிரிவிதை. சமன்காடித் தண்ணீரில் அரைத்து நாடியில் தேய்த்தால்

காகிதச்சுவடி ஆய்வுகள்

287